\
Raja's Playlist a movie based on Ilaiyaraaja music
Raja's PlaylistIlaiyaraja

இளையராஜாவின் இசையை மையமாக வைத்து உருவாகும் படம்! | Ilaiyaraaja | Raja's Playlist

இளையராஜாவின் மூத்த அண்ணனும், திரையுலகின் முன்னணி தயாரிப்பாளருமான ஆர்.டி.பாஸ்கரின் இளைய மகனான ஜெயன் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
Published on

இசைஞானி இளையராஜாவின் குடும்பத்திலிருந்து இன்னொரு நபர் சினிமாவுக்கு வருகிறார். இளையராஜாவின் சினிமா வளர்ச்சியில் பக்கபலமாக இருந்த அவருடைய மூத்த அண்ணனும், திரையுலகின் முன்னணி தயாரிப்பாளருமான ஆர்.டி.பாஸ்கரின் இளைய மகனான ஜெயன் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இத்திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகும் ஜெயனுடன் இணைந்து சோனா ஒலிக்கல், வாகை சந்திரசேகர், குரு சோமசுந்தரம், ரோஜு, பிபியன், ஆர்யா லட்சுமி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். காதல் பின்னணியைக் கொண்ட ஓர் அழுத்தமான மியூசிக்கல் சப்ஜெக்ட் திரைப்படமாக இது உருவாகிறது. இப்படத்தின் கதையை வெங்கட்பிரபு எழுத, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இயக்குநர் சுதா கொங்கரா கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றுகிறார். இளையராஜாவின் பாடல்களை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. ஆர்.டி.பாஸ்கரின் நண்பரான ரமணன் பாலகங்காதரன் இப்படத்தை தயாரிக்கிறார். `குடும்பஸ்தன்' படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜித் என் சுப்ரமணியம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

Raja's Playlist a movie based on Ilaiyaraaja music
ஒரே படத்தில் 11 வேடம்.. அசத்தும் யோகிபாபு! | Yogi Babu
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com