ராகவா லாரன்ஸ்-கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள ‘சந்திரமுகி 2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.
சந்திரமுகி 2
சந்திரமுகி 2@LycaProductions twitter

மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்த ‘மணிச்சித்ரதாழ்’ திரைப்படத்தை, இயக்குநர் பி. வாசு தமிழில் ‘சந்திரமுகி’ என்றப் பெயரில் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர், வினீத், விஜயகுமார், ஷீலா, கே.ஆர். விஜயா, மாளவிகா ஆகியோர் நடித்திருந்தனர். கடந்த 2005-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்புப் பெற்று சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

இதையடுத்து சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் சீக்குவல் உருவாகியுள்ளது. ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். வடிவேலு, ராதிகா சரத்குமார், லக்ஷ்மி மேனன், ஸ்ருஷ்டி டாங்கே, மகிமா நம்பியார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.

இந்நிலையில், இந்தப் படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக புதிய போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது. லைகா தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com