Radhikaa's next film with Aram Gobi Nainar
RadhikaaColony

`தாய் கிழவி'க்கு பிறகு மீண்டும் அழுத்தமான படத்தில் ராதிகா! | Radikaa | Colony

`அறம்' போலவே இதுவும் தீவிரமான தாக்கம் ஏற்படுத்தும் படைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
Published on

`தாய் கிழவி' படம் மூலம் மீண்டும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார் ராதிகா. திரையரங்கில் பெரிய ஹிட்டான அப்படம் ஓடிடியில் வெளியாகியும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது இந்தப் படத்தையடுத்து ராதிகாவின் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. `அறம்' படத்தை இயக்கிய கோபி நயினார் இயக்கத்தில் உருவாகியுள்ள `காலனி' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராதிகா.

Vetrimaaran
Vetrimaaran

தனது மகனின் இறப்புக்கு நீதி தேடி போராடும் ஒரு தாயின் உணர்ச்சிமிகுந்த பயணமே இப்படத்தின் கரு. `அறம்' போலவே இதுவும் தீவிரமான தாக்கம் ஏற்படுத்தும் படைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ராதிகா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவரது மகனாக அறிமுக நடிகர் லியோ நடிக்கிறார். இவர்களுடன் அஞ்சலி நாயர், எம்.எஸ்.பாஸ்கர், சேத்தன், ஆர்.கே.விஜயமுருகன், வினோத்சாகர், மூணார் ரமேஷ், அஜித் கோஷி, இயக்குநர் தமிழ், கீதா கைலாசம், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிறு இடைவெளிக்குப் பிறகு, தேனிசைத் தென்றல் தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டு இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டனர். விரைவில் டீசர், ட்ரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Radhikaa's next film with Aram Gobi Nainar
"அந்த பயணம் முடிந்து வந்ததும் செய்த முதல் விஷயம்..." - மஞ்சு வாரியர் | Manju Warrier | Ajith

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com