Raawadi movie shoot wrapped
Basil JosephRaawadi

பஸில் ஜோசப் & L K அக்ஷய்குமார் கூட்டணியின் `ராவடி' படப்பிடிப்பு நிறைவு! | Basil Joseph

காமெடி என்டர்டெய்னராக உருவாகியுள்ள இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Published on

பஸில் ஜோசப் & L K அக்ஷய்குமார் நடிப்பில் அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கியுள்ள படம் ‘ராவடி’. இந்த படத்தில், ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA, ஷாரீக் ஹாஸன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் இப்படம் உருவாகி வந்தது.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும் ஒகேனக்கல் பகுதியில் படமாக்கப்பட்டன. இந்த திரைப்படத்திற்கு லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைக்க, படத்தொகுப்பை பரத் விக்ரமன் மேற்கொள்கிறார். பரபரப்பாக நடந்துவந்த இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. காமெடி என்டர்டெய்னராக உருவாகியுள்ள இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எடிட்டிங், பின்னணி இசை, VFX உள்ளிட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், வரும் கோடைக்காலத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் S. S. லலித் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். 

Raawadi movie shoot wrapped
முதல் பாகத்தின் வசூலை 11 நாளில் முறியடித்த `துரந்தர் தி ரிவென்ஞ்' | Dhurandhar The Revenge

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com