R J Balaji - Suriya
R J BalajiSuriya

`கருப்பு' பட ரிலீஸ் எப்போது? - ஆர் ஜே பாலாஜி கொடுத்த அப்டேட் | R J Balaji | Karuppu | Suriya

சூர்யாவின் 45வது படமாக உருவாகியுள்ள `கருப்பு' கடந்த ஆண்டு தீபாவளிக்கே வெளியாகி இருக்க வேண்டிய படம், சில தாமதங்களால் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.
Published on
Summary

சூர்யா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள 'கருப்பு' படம், ஜூலை 23ம் தேதி டீசர் மற்றும் பாடல் வெளியீடு செய்யப்பட்டு, தற்போது வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. குடும்பத்துடன் காணும் படமாக இருக்கும் என ஆர் ஜே பாலாஜி கூறியுள்ளார். சில தாமதங்களால் வெளியீடு தள்ளிப்போனது.

சூர்யா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். இதில் ஆர் ஜே பாலாஜியும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சூர்யா பிறந்தநாளான ஜூலை 23ம் தேதி இந்தப் படத்தின் டீசரும், பின்னர் God-u Mode-u பாடலும் வெளியானது.

சூர்யாவின் 45வது படமாக உருவாகியுள்ள `கருப்பு' கடந்த ஆண்டு தீபாவளிக்கே வெளியாகி இருக்க வேண்டிய படம், சில தாமதங்களால் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆர் ஜே பாலாஜியிடம் கருப்பு பட அப்டேட் கேட்கப்பட "`கருப்பு' படம் முடிவடைந்து வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. படம் வெளியாகும் முன்பு பயங்கரமாக படத்தைப் பற்றி பேசி, படம் வெளியான பின்பு பிடிக்கவில்லை என்றால் செம அடி அடிக்கிறார்கள். எப்போதுமே உண்மையாக இருக்க வேண்டும் என விரும்புவேன். ஆனால் படம் நன்றாக வந்துள்ளது, உங்களுக்கு இது பிடிக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

Karuppu
Karuppu
R J Balaji - Suriya
`எனக்கென யாருமில்லையே'... LIK வீடியோ பாடல் வெளியீடு! | Pradeep Ranganathan | Anirudh

சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் கோடை விடுமுறைக்கு ‘கருப்பு’ படம் வெளியாகும். `வலிமை' பட அப்டேட் போல இப்போதெல்லாம் கருப்பு பட அப்டேட் கேட்க துவங்கிவிட்டார்கள். அனைவரும் குடும்பத்துடன் காணும் படமாக இருக்கும்." எனக் கூறியுள்ளார். சூர்யா நடிப்பில் `கருப்பு', வெங்கி ஆட்லுரி இயக்கத்தில் `சூர்யா 46', ஜீத்து மாதவன் இயக்கத்தில் `சூர்யா 47' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளனர்.

R J Balaji - Suriya
நடிகை குறித்த சர்ச்சை பேச்சு| ”தவறி வந்த ஒரு வார்த்தை..” வருத்தம் தெரிவித்த நயினார்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com