R B Choudary
R B ChoudarySuper Good Films

பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி காலமானார்! | R B Choudary | Super Good Films

மாலை 3 மணிக்கு கடும் விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Published on

பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகர்கள் ஜீவா, ரமேஷ் ஆகியோரின் தந்தை ஆர்.பி.சௌத்ரி (74). தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சுமார் 100 திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவர் சாலை விபத்தில் இன்று காலமானார். திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ராஜஸ்தானில் உள்ள உதய்ப்பூர்  அவருடைய பூர்வீகம். அங்கு அடிக்கடி சென்று வருவது அவரது வழக்கம். இந்த முறை அங்கு சென்றபோது மாலை 3 மணிக்கு கடும் விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாளை (மே 6) அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

R B Coudary
R B Coudary

அதிகமான அறிமுக இயக்குநர்களுக்கு பட வாய்ப்பு கொடுத்த ஆர்.பி.சௌத்ரி சினிமாவில் மிக முக்கியமான தயாரிப்பாளர். `சேரன் பாண்டியன்', `கோகுலம்', `நாட்டாமை', `பூவே உனக்காக', `மிஸ்டர் ரோமியோ', `லவ் டுடே', `சூர்யவம்சம்', `துள்ளாத மனமும் துள்ளும்', `நீ வருவாய் என', `ஆனந்தம்', `திருப்பாச்சி' என பல ஹிட் படங்களை கொடுத்து தனித்துவமான தயாரிப்பு நிறுவனமாக உயர்ந்தது. கடந்த ஆண்டு கூட இந்நிறுவனம் தயாரித்து வடிவேலு, பகத் பாசில் நடித்து உருவான `மாரீசன்' படம் வெளியானது. இப்போது விஷால் நடித்து இயக்கிவரும் `மகுடம்' படமும் சூப்பர் குட் தயாரிக்கிறது. இப்படி தொடர்ச்சியாக சினிமாவில் இயங்கியவர் சௌத்ரி. இவரது திடீர் மறைவு பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com