Pushpa 2
Pushpa 2Drishyam 3

ஜப்பானிய மொழியில் புஷ்பா 2 to திரையரங்கில் Stranger Things | இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்

இன்றைய சினிமா செய்திகளில் ஏ ஆர் ரஹ்மான், புஷ்பா 2, Stranger Things, `த்ரிஷ்யம் 3' என பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளன.

1. 5 பாடலும் ரஹ்மான் தான்!

A R Rahman
A R Rahman

பிரபுதேவா நடிப்பில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் `மூன்வாக்' படத்தில் `ஏத்து', `மேக்கரினா', `மயிலே', `டிங்கா', `ஜிகர்' என ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ரஹ்மான். தான் இசையமைக்கும் படத்தின் அனைத்து பாடல்களையும் ஏ ஆர் ரஹ்மான் பாடுவது இதுவே முதல்முறை.

2. ஊறும் ப்ளட் OST

Dude
Dude

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் `டியூட்'. இந்தப் படத்தில் சாய் அப்யங்கர் இசை பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் OST ஜுக் பாக்ஸ் சைடு A, சைடு B என இரு பாகங்களாக வெளியாகியுள்ளது.

3. ரியோ பட விழாவில் விஜய் சேதுபதி

Rio, VJS
Rio, VJS

ரியோ, வர்திகா நடிப்பில் கண்ணன் இயக்கும் 'ராம் in லீலா ' படத்தின் தொடக்க விழாவில் நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து  தெரிவித்தனர்.

4. யுவன் இசையில் 'வஸ்த்தாரா'

பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன், சரத்குமார் நடித்துள்ள 'கொம்பு சீவி' படத்தின் 'வஸ்த்தாரா' பாடல் வெளியீடு. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

5. சிவனே சொல்லும் மெசேஜ்

Boyapatti Sreenu
Boyapatti Sreenu

`அகண்டா 2 தாண்டவம்' பட செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது, அதில் "`அகண்டா' தெலுங்கு படம் அல்ல, அது இந்திய படம். அதே போல `அகண்டா 2 தாண்டவம்' படம் அல்ல இந்தியாவின் ஆன்மா. இப்படம் பார்த்து முடிக்கையில் சிவனே உங்கள் முன் தோன்றி ஒரு மெசேஜ் சொன்னதை போல இருக்கும். அந்த மெசேஜ் தேசம், தர்மம், தெய்வம், வேதம் இவற்றை அடித்தளமாக கொண்டது" எனப் பேசியுள்ளார் இயக்குநர் போயபட்டி ஸ்ரீனு 

Pushpa 2
`அகண்டா 2' சனாதன தர்மம் பற்றி பேசும் - நந்தமுரி பாலகிருஷ்ணா | NBK | Akhanda 2 | Boyapati Sreenu

6. ஐஸ்வர்யா ராஜேஷின் `ஓ...! சுகுமாரி'

ஐஸ்வர்யா ராஜேஷ் - திருவீர் நடிக்கும் படத்தின் தலைப்பு `ஓ...! சுகுமாரி' என அறிவிப்பு. இப்படத்தை பரத் தர்ஷன் இயக்குகிறார். இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

7. ஜப்பானிய மொழியில் புஷ்பா 2

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கி வெளியாகி ஹிட்டான `புஷ்பா 2' படம் ஜப்பானிய மொழியில் டப் செய்யப்பட்டு ஜனவரி 16, 2026 ஜப்பானில் வெளியாகிறது. தற்போது படத்தின் ஜப்பானிய டிரெய்லர் வெளியாகியுள்ளது.

8. `த்ரிஷ்யம் 3' படப்பிடிப்பு நிறைவு

மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் இரு பாகங்களாக வெற்றியடைந்த படம் `த்ரிஷ்யம்'. பரபரப்பாக உருவாகிவந்த இதன் மூன்றாவது பாகத்தின் படப்பிடிப்பு முடிந்தது என அறிவித்துள்ளனர்.

9. சிறப்பு தோற்றத்தில் அமீர்கான்

பிரபல ஸ்டான்ட் அப் காமெடியன் வீர்தாஸ், கவி சாஸ்திரியுடன் இணைந்து இயக்கியுள்ள `Happy Patel' படம் ஜனவரி 16, 2026 வெளியாகும் என அறிவிப்பு. இப்படத்தை வெளியிடுவதோடு, படத்திலும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் அமீர்கான்.

10. திரையரங்கில் Stranger Things

Stranger Things 5
Stranger Things 5

உலகம் முழுக்க பிரபலமான நெட்ஃபிளிக்ஸ் தொடர் `ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ்'. தற்போது ஒளிப்பரப்பாகிவரும் 5வது சீசன் தான் இத்தொடரின் கடைசி அத்யாயம். எனவே டிசம்பர் 31ம் தேதி வெளியாகவுள்ள இந்த தொடரின் கடைசி எபிசோடை அமெரிக்கா மற்றும் கனடாவில் 500க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிட உள்ளனர். கடைசி எபிசோடின் நீளம் 2 மணிநேரம் 5 நிமிடங்கள்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com