Puthupettai Re-release
Puthupettai Re-releasex

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‘புதுப்பேட்டை’ திரைப்படம் ரீ-ரிலீஸ்!

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 26-ல் புதுப்பொலிவுடன் 4K தரத்தில் புதுப்பேட்டை திரைப்படம் வெளியாகவிருக்கிறது.
Published on

தமிழ் சினிமாவின் நடிகர்களில் தனுஷ் மிகவும் தனித்துவமானவர். தென்னிந்தியா, பாலிவுட் எல்லாம் தாண்டி ஹாலிவுட் வரை தனது நடிப்பு எல்லையை விரிவுபடுத்தியவர். இன்னொரு பக்கம் நடிப்பையும் கடந்து தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் மற்றும் இயக்குநர் என இன்னும் பல முகங்கள் அவருக்கு உண்டு.

புதுப்பேட்டை
புதுப்பேட்டை

நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த ‘புதுப்பேட்டை’ திரைப்படம் வரும் ஜூலை 26-ம் தேதி தமிழ்நாட்டில் மறுவெளியீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுப்பொலிவிவுடன் இப்படம் வெளியாகவுள்ளதால் தனுஷின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Puthupettai Re-release
”நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துப் போய்விட்டது..” முத்தமழை பாடலை புகழ்ந்த செல்வராகவன்!

புதுப்பேட்டை ரீ-ரிலீஸ்..

கடந்த 2006-ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் ‘புதுப்பேட்டை’. தமிழ்சினிமாவில் கேங்ஸ்டர் படங்களை புதுப்பேட்டைக்கு முன் - பின் என வகைப்படுத்தும் அளவிற்கு இப்படத்தின் தாக்கம் ரசிகர்களிடையே உள்ளது. புதுப்பேட்டை தமிழ் சினிமாவில் கேங்ஸ்டர் படங்களுக்கு ஒரு புதிய வரையறையை கொண்டு வந்தது. இதற்கு முன் கேங்ஸ்டர் படங்கள் பெரும்பாலும் ஆக்ஷன் மற்றும் வன்முறையை மையப்படுத்தியிருந்தது.

புதுப்பேட்டை
புதுப்பேட்டை

ஆனால் இந்த படம் கதாபாத்திரங்களின் உளவியல் ஆழத்தையும், சமூக அமைப்பின் தாக்கத்தையும் எடுத்துக்காட்டியது. தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் என அழைக்கப்படும் இப்படத்தில் சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகர் விஜய்சேதுபதி இந்தப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

புதுப்பேட்டை
புதுப்பேட்டை

தற்போது தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 26ம் தேதியன்று புதுப்பேட்டை படத்தை ரீ மாஸ்டரிங் செய்து டிஜிட்டல் பொழிவில் 4K தரத்தில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு இப்படத்தை திருமதி S .விஜய நிர்மலா சரவண பவா அவர்கள் விஜய் சூர்யா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ரீ -ரிலீஸ் செய்கிறார். தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டமாக இந்த வருடம் அவரது ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்து கிடைக்க போகிறது என்பது மட்டும் உறுதி.

Puthupettai Re-release
’குத்தி குத்தி கிழிச்சாங்க; இன்னும் அழுதிட்டே இருக்கன்’-ஆயிரத்தில் ஒருவன் குறித்து செல்வராகவன் வேதனை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com