"எனக்கு நிறைய விஷயங்கள் நடந்தது..." - Social Media Trolls குறித்து ப்ரியங்கா மோகன் | Priyanka Mohan
`டாக்டர்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ப்ரியங்கா மோகன். தொடர்ந்து `எதற்கும் துணிந்தவன்', `டான்', `கேப்டன் மில்லர்' போன்ற படங்களில் நடித்தார். சமீப காலமாக ப்ரியங்கா மோகனை குறிவைத்து ட்ரோல் செய்யப்படுவதும், மோசமான அவர் விமர்சிக்கப்படுவதும் தொடர்ந்து வந்தது. இதை திட்டமிட்டு ஒரு அமைப்பாக சேர்ந்து செய்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. இவர் நடித்து வெளியாகவுள்ள `Made in Korea' படம் மார்ச் 12ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தொடர்ந்து பேட்டிகளை அளித்து வருகிறார் ப்ரியங்கா.
அந்தப் பேட்டி ஒன்றில், இப்டியானா ட்ரோல் Campaign குறித்து கேள்வி கேட்கப்பட "ஆம் அப்படி நடந்தது உண்மை தான். ஆனால் அது என்ன வகையில் என சொல்ல வேண்டும். Campaign என்பது பெரிய வார்த்தை. ஆனால் இப்போது எல்லாரையும் ட்ரோல் செய்கிறார்கள். லெஜண்ட்ஸ், பெரிய நடிகர்கள், இயக்குநர்கள் என எல்லோரையும் ட்ரோல் செய்கிறார்கள். எதற்காக என எனக்கு புரியவே இல்லை.
எனக்கு நிறைய விஷயங்கள் நடந்தது. அதை பற்றி விரிவாக பேச நான் விரும்பவில்லை. ஆனால் அதிலிருந்து நிறைய கற்றுக் கொண்டு என்னை மேம்பட்ட நபராக மாற்றியிருக்கிறது. நான் புரிந்து கொண்டது என்னவென்றால் இது நிலையில்லாத துறை. எதுவும், யாருக்கும் நடக்கும். அப்படி நடக்கையில் அது உங்களை மோசமான இடத்துக்கு அழைத்து செல்லும். எல்லோரும் மென்மையானவர்கள் தான், எல்லோரையும் பாதிக்கும் தான். எப்போதுமே இப்படியான விஷயங்கள் நடந்தால், அதிலிருந்து நீங்கள் மீண்டு வருவீர்கள். கீழே விழுவது தான், எழுவதற்கான முதல் படி. இதன் மூலம் நான் நல்ல படங்களை கற்றுக் கொண்டு, என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வேலையில் பயன்படுத்திக் கொள்கிறேன். எனவே என்னை தாக்கியவர்களுக்கு நன்றி." என்றார்.

