"Hat-trick 100 Crore... ரொம்ப நன்றி! - நெகிழ்ச்சியாக பேசிய பிரதீப் | Dude | Pradeep Ranganathan
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கி வெளியான படம் `டியூட்'. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் டுடே, டிராகன் பட வெற்றியை தொடர்ந்து டியூட் படமும் ரூ.100 கோடியை கடந்து வசூல் சாதனையில் ஹாட்ரிக் அடித்திருக்கிறது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரதீப் ரங்கநாதன். இந்த வீடியோவில் "முதல் மூன்று படங்களுக்கு ஹாட்ரிக் 100 கோடி வசூல் வெற்றி. இதற்கு என்னை வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. ஆனால் இதற்கு காரணம் நான் இல்லை, நீங்கள் தான். நீங்கள் எனக்கு கொடுத்த ஆதரவு, உங்கள் வீட்டில் ஒருவனாக என்னை பார்த்தது, இதெற்கெல்லாம் என்ன சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை, நன்றியை தவிர்த்து. ரொம்ப நன்றி.
தமிழ் மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள். இந்த சமயத்தில் எனக்கு வாய்ப்பளித்த ஜெயம் ரவி சார், ஐசரி கணேஷ் சார், அகோரம் சார், ஏஜிஎஸ் அர்ச்சனா கல்பாத்தி மேம், மைத்ரி மூவி மேக்கர்ஸ், என் இயக்குநர்கள் அஸ்வத் மாரிமுத்து, கீர்த்தீஸ்வரன் அனைவருக்கு நன்றி. இதைத்தாண்டி தெலுங்கு, கேரளா, கர்நாடகா, ஓவர் சீஸ் என எல்லா மொழி மக்களுக்கும் எனது நன்றிகள். லவ் யூ" என நெகிழ்வுடன் பேசி இருக்கிறார் பிரதீப்.

