Prabhu Deva's son Rishii debut as an actor on Musical Album
Rishii DevaMudhal Mudhalaai

கலைப்பயணத்தைத் துவங்கிய பிரபுதேவாவின் மகன்! | Rishii Deva | Prabhu Deva

இசையமைப்பாளர் ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸ் இப்பாடலை எழுதி இசையமைக்க,  ஜி.வி.பிரகாஷ் குமார் பாடியிருக்கிறார். பாடலில் வரும் ராப் வரிகளை இசைக் கலைஞர் ஆதித்யா பாடியிருக்கிறார்.
Published on

இந்திய சினிமாவில் நடன வடிவமைப்பாளராக, நடிகராக, இயக்குநராக என பிரபலமானவர் பிரபுதேவா. இப்போதும் தீவிரமாக ஹீரோ ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது அவருக்குப் போட்டியாக அவரது வீட்டிலிருந்தே ஒரு ஹீரோ களம் இறங்கியுள்ளார்.

நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா இப்போது தன்னுடைய கலைப் பயணத்தைத் துவங்கியிருக்கிறார். 'முதல் முதலாய் ' என்ற இன்டி மியூசிக்கல் வீடியோ ஆல்பம் மூலம் தனது நடனமாடி நடிகராக அறிமுகமாகி இருக்கிறார். இசையமைப்பாளர் ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸ் இப்பாடலை எழுதி இசையமைக்க,  ஜி.வி.பிரகாஷ் குமார் பாடியிருக்கிறார். பாடலில் வரும் ராப் வரிகளை இசைக் கலைஞர் ஆதித்யா பாடியிருக்கிறார். ரிஷி தேவா உடன் இணைந்து நடிகை கைரா இப்பாடலில் நடனமாடியுள்ளார்.

Prabhu Deva's son Rishii debut as an actor on Musical Album
ஹெச்.வினோத் இல்லை.. மெகாஹிட் பட இயக்குநருடன் இணைகிறாரா தனுஷ்? | Dhanush

இந்தப் பாடலை ட்ரஸ்டினா ஐசக் இயக்க, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, சுரேன் நடனம் அமைத்திருக்கிறார். நடிகர் பிரபுதேவா நடனமாடி பிரபலமான 'சிக்கு புக்கு ரயிலே, பாடலை சிறுவயதில் ஜி.வி.பிரகாஷ் குமார் பாடினார்.

இப்போது பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும், 'முதல் முதலாய் ' மியூசிக்கல் வீடியோ ஆல்ப பாடலையும் ஜி.வி.பிரகாஷ் குமார்தான் பாடியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்பாடல் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com