25 ஆண்டுகளுக்கு பின் பிரபுதேவா - வடிவேலு.. நிறைவடைந்த படப்பிடிப்பு! | Prabhu Deva | Vadivelu
நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு இணைந்து நடித்து வந்த படம் `பேங் பேங்'. KRG கண்ணன் ரவியின் பிரமாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் சாம் ரோட்ரிகஸ் இப்படத்தை எழுதி இயக்கி வந்தார்.
பிரபு தேவா - வடிவேலு கூட்டணி 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள இந்த திரைப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வித்தியாசமான ஜோம்பி வகை ஜானரில் உருவாகி வரும் இப்படம், ஆக்ஷன், காமெடி மற்றும் ஹாரர் அம்சங்கள் கலந்த கமர்ஷியல் படமாக இருக்குமாம். மலேசியாவில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. அந்த பிரம்மாண்ட காட்சிகள் படத்தின் முக்கிய ஹைலைட்டாக அமையும் என படக்குழு தெரிவித்துள்ளது. முன்னதாக வெளியான இப்படத்தின் டைட்டில் டீஸர் கவனத்தை ஈர்த்திருந்தது.
இந்தோனேசியாவின் Mount Bromo எரிமலை பகுதியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்த நிலையில், விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. “பேங் பேங்” திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளது படத்தயாரிப்பு நிறுவனம்.

