`காஞ்சனா 4'ல் பூஜா ஹெக்டே ON BOARD... வெளியான அறிவிப்பு! | Kanchana 4 | Pooja Hegde
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகி 2007ல் வெளியான படம் `முனி'. இப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இதன் அடுத்த பாகங்களாக `காஞ்சனா', `காஞ்சனா 2', `காஞ்சனா 3' ஆகிய படங்கள் எடுக்கப்பட்டது. இப்போது `காஞ்சனா 4' படத்தை இயக்கி வருகிறார் ராகவா லாரன்ஸ். இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே மற்றும் நோரா ஃபடேஹி இணைந்துள்ளதை அதிகப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளனர்.
இப்படத்தின் மற்ற நடிகர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பபடுகிறது. மேலும் காஞ்சனா படத்தின் முந்தைய பாகங்களை போல இதுவும் ஹாரர் காமெடி படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை சன்பிக்சர்ஸ் மற்றும் கோல்ட்மைன் நிறுவனங்களுடன் இணைந்து ராகவா லாரன்ஸின், ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
காஞ்சனா 3ம் பாகம் 2019ல் வெளியானது கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக கழித்து இதன் அடுத்த பாகம் உருவாகி வருகிறது. மேலும் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் கடைசியாக உருவான படம் `காஞ்சனா' படத்தின் இந்தி ரீமேக்காக அக்ஷய்குமார் நடித்த `லக்ஷ்மிபாம்'. ஒரு இயக்குநராகவும் லாரன்ஸ் பெரிய இடைவெளிக்குப் பிறகு திரும்ப இயக்கும் படமாக உருவாகி வருகிறது இப்படம். இது காஞ்சனா பட வரிசையின் 4வது பாகமாக மற்றும் `முனி' படவரிசையின் 5வது பாகமாக உருவாகிறது. எனவே தமிழ் சினிமா பொறுத்தவரை அதிக பாகங்கள் எடுக்கப்பட்ட படமாக `முனி' இடம் பிடிக்கிறது.

