Pooja
PoojaD55

தனுஷ் படத்தில் பூஜா ஹெக்டே? | Pooja Hegde | Dhanush

பூஜா நடிப்பில் தற்போது `ஜனநாயகன்', `Hai Jawani Toh Ishq Hona Hai' ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும், `காஞ்சனா 4', துல்கர் சல்மான் நடிக்கும் `DQ41' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
Published on

தனுஷ் நடிப்பில் இந்தாண்டு `குபேரா', `இட்லி கடை' படங்கள் வெளியானது. `Tere Ishk Mein' நவம்பர் 28 வெளியாகவுள்ளது. தனுஷின் 54வது படத்தை `போர் தொழில்' விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார், இதன் படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்டது.

அடுத்தாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் `D55' படத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ். இப்போது இப்படம் பற்றிய அப்டேட் என்ன என்றால், இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க இருப்பது பூஜா ஹெக்டே என சொல்லப்படுகிறது. பூஜா நடிப்பில் தற்போது `ஜனநாயகன்', `Hai Jawani Toh Ishq Hona Hai' ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும், `காஞ்சனா 4', துல்கர் சல்மான் நடிக்கும் `DQ41' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தப் பட்டியலில் இப்போது `D55' படமும் இணைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் துவங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Rajkumar Periyasamy, Dhanush
Rajkumar Periyasamy, DhanushD55

அமரன் போல, இப்படமும் ஒரு நிஜ சம்பவத்தை மையமாக வைத்து உருவாகிறதாம். படத்துக்கு இசை கோலிவுட்டின் சென்சேஷன் சாய் அப்யங்கர் என கூறுகின்றனர். விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com