முதல் நாள் வசூலில் ‘வாரிசு’, ‘துணிவு’ படங்களை முந்தியதா ‘பொன்னியின் செல்வன் 2’ - வெளியான நிலவரம்!

தமிழ்நாட்டில் முதல் நாள் வசூலில் ‘வாரிசு’ படத்தை முந்தியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம், ‘துணிவு’ திரைப்படத்தைவிட பின்தங்கியுள்ளது.
வாரிசு, துணிவு, பொன்னியின் செல்வன்
வாரிசு, துணிவு, பொன்னியின் செல்வன்ட்விட்டர்

அமரர் கல்கியின் வரலாற்று புனைவு நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதையை அதே பெயரில் திரைப்படமாக எடுத்து, 2 பாகங்களாக வெளியிட்டுள்ளார் மணிரத்னம். எம்.ஜி.ஆர்., கமல்ஹாசன் ஆகியோர் இந்த நாவலை திரைப்படமாக எடுக்க ஆசைப்பட்ட நிலையில், கடைசியில் பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு, அதுவும் கொரோனா ஊரடங்கு காலத்தில் 150 நாட்களில் படப்பிடிப்பு நடத்தி முடித்து சாதித்து, வெற்றிகரமாக படத்தை திரையரங்குகளில் வெளியிட்டுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

வாரிசு, துணிவு, பொன்னியின் செல்வன்
PS-2: நடிகர் கார்த்தியை பார்க்க திரையரங்கில் குவிந்த ரசிகர்கள் கூட்டம் - உடைந்த முகப்பு கண்ணாடி!

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து சுமார் 500 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இதனைத் தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று (ஏப்ரல் 28), உலகம் முழுவதும் 2,800-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம், முதல் நாளிலேயே இந்தியாவில் மட்டும் 32 கோடி ரூபாய் முதல் 38 கோடி ரூபாய் வரையில் வசூலித்துள்ளது. உலக அளவில் 64.14 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகக தகவல் வெளியாகியுள்ளன.

குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் 21.1 கோடி ரூபாய் வரை முதல் நாளில் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கேரளாவில், 2.8 கோடி ரூபாயும், ஆந்திரா/தெலங்கானாவில் 3.6 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம், 32.14 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது. எனினும், தமிழ்நாட்டில், ‘பொன்னியின் செல்வன்’ முதல்பாகத்தை விட, ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகம் வசூலில் சற்று குறைந்துள்ளது. 26 கோடி ரூபாய் வரையில் முதல் பாகம் வசூலித்திருந்தநிலையில், அதற்கு சற்று குறைவாகவே 21 கோடி ரூபாய் வரையே இரண்டாம் பாகம் வசூலித்துள்ளது. அதிகாலை நான்கு மணி காட்சி இல்லாதது; முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகத்திற்கு மக்கள் ஆர்வம் காட்டாதது உள்ளிட்டவை காரணங்களாகப் பார்க்கப்படுகின்றது.

Ponniyin Selvan II
Ponniyin Selvan IIMadras Talkies

அதேவேளையில் 2023-ம் ஆண்டில் வெளியான தமிழ் படங்களில் முதல் நாள் வசூலில், உலக அளவில் விஜய்யின் ‘வாரிசு’ மற்றும் அஜித்தின் ‘துணிவு’ படத்தை, ‘பொன்னியின் செல்வன்-2’ முந்தியுள்ளது. கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘வாரிசு’ திரைப்படம், முதல் நாளில் 47.5 கோடி ரூபாயும், ‘துணிவு’ 41 கோடி ரூபாயும் வசூலித்திருந்தது. ஆனால், இதனை ‘பொன்னியின் செல்வன் 2’ முந்தியுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் முதல் நாள் வசூலில் ‘வலிமை’ திரைப்படம் ரூ. 36.17 கோடியுடன் முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து ‘பீஸ்ட்’ ரூ.31.4 கோடியுடன் 2-ம் இடத்திலும், ‘பொன்னியின் செல்வன்-1’ ரூ.26 கோடியுடன் 3-வதாகவும், ‘துணிவு’ ரூ.22.15 கோடியுடன் 4-வது இடத்திலும், ‘பொன்னியின் செல்வன்-2’ ரூ. 21.1 கோடியுடன் 5-வது இடத்திலும் உள்ளது. ‘வாரிசு’ திரைப்படம் ரூ. 20.15 கோடியுடன் 6-வது இடத்தில் இருக்கிறது. அதாவது, இந்த வருடத்தில் வெளியாகி, தமிழ்நாட்டில் முதல் நாளில் ‘வாரிசு’ படத்தை முந்தியுள்ள ‘பொன்னியின் செல்வன்-2’, ‘துணிவு’ படத்தின் வசூலை முறியடிக்கவில்லை.

வாரிசு, துணிவு, பொன்னியின் செல்வன்
5 மாத கர்ப்பிணி மனைவியை மிரட்ட prank செய்தபோது கன்னட சீரியல் நடிகர் பலி ? - நண்பர் தந்த விளக்கம்!

உலக அளவில் முதல் நாள் வசூலில் ரஜினியின் ‘2.0’ (ரூ. 94 கோடி), ‘கபாலி’ (ரூ. 87.5 கோடி), பீஸ்ட் (ரூ. 84.13 கோடி), பொன்னியின் செல்வன்-1 (ரூ. 82.5 கோடி), சர்கார் (ரூ. 67.2 கோடி) படத்தை அடுத்து பொன்னியின் செல்வன்-2 (ரூ. 64.14 கோடி) உள்ளதாக கூறப்படுகிறது. இன்றும், நாளையும் வார விடுமுறை நாட்கள் என்பதால், படத்தின் வசூல் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com