கோலிவுட் செய்திகள்
விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு புதிய சிக்கல்!
ஓடிடி வெளியீட்டில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன்- 2 திரைப்படத்தில் மத்திய அரசின் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
விஜய் ஆண்டனி இயக்கி நடித்திருந்த 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் கடந்த மாதம் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒய்.ஜி. மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
விஜய் ஆண்டனிtwitter
இந்த நிலையில், புகையிலை கட்டுப்பாட்டிற்கான தமிழக மக்கள் அமைப்பு சார்பில் வெளியிட்ட அறிக்கையில், “பிச்சைக்காரன்- 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியானபோது, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருள் பயன்படுத்தும் காட்சிகளில் எச்சரிக்கை வாசகம் இடம்பெற்றுள்ளது. ஆனால், ஓடிடியில் இதுபோன்ற வாசகங்கள் இல்லாமல் படம் வெளியாகி உள்ளது. படத்தின் தொடக்கம் மற்றும் நடுவில் புகையிலை, மது பழக்கத்துக்கு எதிரான வசனங்களும் இடம்பெறவில்லை” என்று கூறியுள்ளது.