Padayappa 2
Padayappa 2Part 2 Tamil Movies

ஜப்பானில் கல்யாணராமன் To பொன்னியின் செல்வன் 2 | தமிழ் சினிமா வரலாற்றில் பார்ட் 2 படங்களின் நிலைஎன்ன?

சூப்பர்ஸ்டாரின் இந்த அப்டேட் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், சற்று அதிர்ச்சியையும் கொடுத்திருப்பது உண்மை. ரசிகர்கள் கொண்டாடிய பல படங்கள் பார்ட் 2 என்ற பெயரில் வெளியாகி அவர்களை விரக்தியடைய செய்ததே இந்த டரியலுக்கு காரணம்.

செய்தியாளர் - ஜெ.தமிழரசன்

1999 ஆம் ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘படையப்பா’ திரைப்படம்  அவர் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதியன்று  ரீ-ரிலிஸ் ஆகிறது. இந்நிலையில் படையப்பா படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. படையப்பா படம் குறித்து பல சுவாரசியமான தகவல்களை அவர் பேசுகையில், ‘நீலாம்பரி’ என்ற டைட்டிலில் படையப்பா படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக அப்டேட் ஒன்றையும் கொடுத்தார்.

பார்ட் 2  என்ற பெயரில் வெளியான பல பர்னிச்சர்கள் உடைந்து சுக்குநூறான வேளையில் சூப்பர் ஸ்டாரின் இந்த அப்டேட் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், சற்று அதிர்ச்சியையும் கொடுத்திருப்பது உண்மை. ரசிகர்கள் கவிதைகளாக ரசித்து காவியமாய் கொண்டாடிய பல திரைப்படங்கள் பார்ட் 2 என்ற பெயரில் வெளியாகி திரையரங்குகளில் அவர்களை விரக்தியடைய செய்ததே இந்த டரியலுக்கு காரணம். பல வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களுக்கு தற்போது பார்ட் 2 எடுக்க வேண்டிய அவசியம் என்னவென்று பார்த்தால் கதையின் தேவையாக இருக்காது மாறாக அந்தப் படத்தின் இயக்குநர் அல்லது ஹீரோக்கள் நீண்ட காலமாக வெற்றி கொடுக்க முடியாத காரணத்தினால் தங்களின் வணிக வெற்றிக்காக இறுதியாக பற்றும் ஆயுதமே இரண்டாம் பாகம் இருக்கலாம் என்ற கருத்தும் சினிமா விமர்சகர்களால் முன் வைக்கப்படுகிறது.

இந்த பார்ட் 2 கலாச்சாரம் எப்போது தொடங்கியது என்பதையும் , தற்போது வரை தமிழ் சினிமாவில் வெளியான பார்ட் 2 படங்கள் பற்றியும் அடுத்து வெளியாகவுள்ள படங்கள் குறித்தும் பார்க்கலாம்.

1. ஜப்பானில் கல்யாணராமன் (1985)

Japanil Kalyanaraman
Japanil Kalyanaraman

தமிழ் சினிமாவில் பலப் புதுமைகளை புகுத்திய கமல்ஹாசன் தான் இந்த பார்ட் 2 படங்களுக்கும் தொடக்கப் புள்ளியை வைத்தவர். 1979 ஆம் ஆண்டு வெளியான கல்யாணராமன் படத்தின் தொடர்ச்சியாக வெளியானது ஜப்பானில் கல்யாணராமன் முந்தைய பாகம் வெற்றி அடைந்திருந்தாலும் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

2. குரோதம்-2 (2000)

Krodham 2
Krodham 2

பிரேம் மேனன் நடிப்பில் 1982 ஆம் ஆண்டு  வெளியான  படத்தின் பார்ட் 2 ஆக வெளியானது . இப்படி ஒரு திரைப்படம் வெளியானது ரசிகர்கள் பலருக்கும் தெரியாது.

3. நான் அவன் இல்லை 2 (2009)

Naan Avan illai 2
Naan Avan illai 2

செல்வா இயக்கத்தில் ஜீவன் நடிப்பில் வெளியான இந்தப் படத்தில்  விஜய் ஆண்டனி  இசையில் ‘மச்சக்கன்னி‘ என்ற குத்துப்பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது.

4. பில்லா 2 (2013)

Billa 2
Billa 2

1980 ஆம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் ‘பில்லா’ படம் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத்குமார் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு  2007ல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் பார்ட் 2 சக்ரி டோலட்டி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியானது . ‘ஸ்கேர்ஃபேஸ் ‘ ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களை பெரிதாய் கவரவில்லை.

5. சிங்கம்

Singam
Singam

இயக்குநர் ஹரியின் விறுவிறுப்பான திரைக்கதையில் 2010ல் வெளியான சிங்கம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிங்கம் 2 (2013) மற்றும் சி 3 என்ற பெயரில் மூன்றாம் பாகமும் (2017) ஆம் ஆண்டும் வெளியானது. இதே இயக்குநரின் மிகப்பெரிய வெற்றிப்படமான சாமி (2003) படத்தின் இரண்டாம் பாகம் 2018ல் வெளியாகி மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது.

6. முனி/காஞ்சனா சீரிஸ்

Kanchana
Kanchana

2007 ஆம் ஆண்டு நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி திரைப்படத்தின்  மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து 4 பாகங்கள் வெளியாகி வெற்றியடைந்த நிலையில் தற்போது 5 ஆம் பாகம் வெளியாகவுள்ளது.

7. அரண்மனை சீரிஸ்

Aranmanai
Aranmanai

2014 ஆம் ஆண்டு வெளியான அரண்மனை படத்தின் வெற்றி தற்போது வரை சுந்தர் சி தோல்வி படங்களை கொடுத்து தடுமாறும் போது  கைக்கொடுத்து காப்பாற்றும் ஆபத்பாந்தவனாக இருந்து 4 பாகங்களாக வெளிவந்துள்ளது. தற்போது 5 பாகத்தை எடுக்கும் முயற்சியில் இருக்கிறார் சுந்தர் சி.

8. சண்டக்கோழி 2 (2018)

Sandakozhi 2
Sandakozhi 2

லிங்குசாமி இயக்கத்தில் விஜய்க்கு எழுதிய கதையில் விஷால் நடிக்க 2005ல் வெளியான சண்டக்கோழி மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது . 2018 ம் ஆண்டு பார்ம்அவுட் ஆகியிருந்த விஷாலும்,லிங்குசாமியும் பார்ட் 2 எடுக்க படம் பிளாப்.

9. விஸ்வரூபம் 2 (2018)

Vishvaroopam 2
Vishvaroopam 2

பல சர்ச்சைகளுக்குப் பின் வெளியான முதல் பாகத்தின் வெற்றிக்குப் பின் உடனடியாக வெளியாகும் என எதிர்பார்த்த இரண்டாம் பாகம் 5 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகி தோல்வியை சந்தித்தது.

10. வேலையில்லா பட்டதாரி 2 (2017)

VIP 2
VIP 2

தனுஷின் 25 வது படமாக வெளியாகி ஹிட் அடித்த படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. மேலும் சுமாரான படமான ‘மாரி’ படத்திற்க்கும் இரண்டாம் பாகம் எடுத்து தோல்வி கண்டார் தனுஷ்.

11. இந்தியன் 2 (2024)

Indian 2
Indian 2

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிப்படமான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் 28 ஆண்டுகளுக்குப்  பின் வெளியாகி மிக மோசமான விமர்சனங்களை பெற்றது. கடந்த ஆண்டு வெளியான படங்களிலயே நெட்டிசன்களால் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டது.

12.  2.0 (2018)

2.0
2.0

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் தரத்தை உலக அரங்கில் ஒரு அடி தூக்கி நிறுத்திய எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று முதலுக்கு மோசமில்லாமல் தப்பித்தது.

13. தமிழ் படம் 2 (2018)

Tamizh Padam 2
Tamizh Padam 2

தமிழ் சினிமாவின் இலக்கணம் மற்றும் மரபுகளை கலாய்த்து எடுக்கப்பட்ட இப்படத்தின் இரண்டாம் பாகம் பெரிதாக வெற்றிபெறவில்லை.

14. பொன்னியின் செல்வன் 2 (2023)

Ponniyin Selvan
Ponniyin Selvan

தமிழ்  சினிமாவின் கனவு திரைப்படமான  பொன்னியின் செல்வன் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் இரண்டாம் பாகம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.

15. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

Jigarthanda 2
Jigarthanda 2

மிகப்பெரிய வெற்றிப்படமான ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி கலவையான  விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான பார்ட் 2   திரைப்படங்களின் ரிசல்ட் இப்படி ரஜினியின் படையப்பா பார்ட் 2 ஆசை அவரின் ‘அதீத நம்பிக்கையை’ வெளிகாட்டுகிறது. அடுத்து வெளிவர உள்ள பார்ட் 2 திரைப்படங்களில் அதிகம் எதிர்பார்க்கபடும் திரைப்படங்கள்.

16. ஜெயிலர் 2

Jailer 2
Jailer 2

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு  வெளியான  ‘ஜெயிலர்’ திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து பார்ட் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைப்பெற்று வருகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது.

17. வட சென்னை 2

Vada Chennai 2
Vada Chennai 2

வெற்றிமாறன் – தனுஷ் காம்பினேஷனில் 2018 ஆம் ஆண்டு  வெளியான ‘வடசென்னை’ படத்தின் இரண்டாம் பாகம் ‘அன்புவின் எழுச்சி’க்காக தமிழ் சினிமா ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக்கொண்டிருக்கிறார்கள் . தனுஷ், வெற்றிமாறன் எந்த மேடை ஏறினாலும் ரசிகர்கள் அனைவரும் தவறாது  வடசென்னை இரண்டாம் பாகத்திற்கான அப்டேட் கேட்பதே இதற்கு சாட்சி.

18. கைதி 2

Kaidhi
Kaidhi

லோகேஷ் கனகராஜ் இயக்கதில் கார்த்தி நடிப்பில்  2019 ஆம் ஆண்டு  தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கைதி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவிப்பு வந்து ஆண்டுகள் கடந்ததும் படப்பிடிப்பு தொடங்காததால் படம் உருவாகுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே கிளம்பியுள்ளது.

19. சர்தார் 2

Sardar 2
Sardar 2

இயக்குநர் மித்ரன் இயக்கத்தில்  கார்த்திக்கு இன்னொரு தீபாவளி வெற்றியாக 2022 ஆம் ஆண்டு வெளியானது சர்தார் . இந்த படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com