Dravid Selvam
Dravid SelvamDude

"8 வருடம் கண்ணா பின்னாவென ஏற்ற இறக்கம்!" - `பரிதாபங்கள்' டிராவிட் உருக்கமான பதிவு | Dude

செல்வம் - கற்பகம் தம்பதியினரிடம் ஒரு வாரத்தில் நான் திரும்பி வருவேன் என்று சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. ஒரு படம் செய்ய 8 ஆண்டுகள் ஆகியிருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், உங்களையெல்லாம் இவ்வளவு நேரம் காத்திருக்க வைத்ததற்கு வருத்தமாகவும் இருக்கிறது.
Published on

கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார் எனப் பலரும் நடித்த `டியூட்' படம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் 100 கோடி வசூலை செய்துள்ளது. இப்படத்தில் பிரதீப்பின் நண்பர் பாத்திரத்தில் நடித்திருந்தார் `பரிதாபங்கள்' டிராவிட் செல்வம். இப்போது இந்தப் படத்தின் மூலம் அவருக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் நீண்ட பதிவு ஒன்றை எழுதி இருக்கிறார் டிராவிட்.

"முதலில், அனைவருக்கும் ஒரு பெரிய நன்றி, எங்கிருந்து தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை!  இது மிகவும் உணர்ச்சிகரமானது. 2017ல் நான் சென்னைக்கு வந்ததிலிருந்து கோசு சகோதரர்களின் ஆதரவு உள்ளது. அனைவரையும் ஒன்றிணைத்த ஜேஜே கல்லூரி, யுவராஜ் அண்ணா ஃபைன் ஆர்ட்ஸ் ஆகியோருக்கு நன்றி.

என் மீது நம்பிக்கை வைத்து Internal மதிப்பெண்களுடன், ODயும் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய என் கல்லூரி ஊழியர்களுக்கு நன்றி. என் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த என் நண்பர்கள் முருகன், தீபன், தில்லை, அருள், அருண், ரப்பர், சங்கரு, மாருதி, தினா பாய், பாலா அண்ணா, கௌதம் அண்ணா, மெய்யப்பன் அண்ணா, சாமிநாதன், காமராஜ், சாந்தன், கிஷோர் ஆகியோருக்கு நன்றி. உங்களை நான் மிஸ் செய்கிறேன், நீங்கள் என்னை ஒருபோதும் எதிர்மறையாக சிந்திக்க வைக்கவில்லை. 2017 இல் சென்னை நோக்கிச் செல்வதற்கு முன்பு, நான் என் நண்பர் தில்லையுடன் குறும்படங்களை செய்ய துவங்கினேன். அவர் என் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு நான் எப்போதும் அவருக்குக் கடமைப்பட்டிருப்பேன். TN45boys சேனல் - அனைத்து கன்டென்ட் க்ரியேட்டர்ஸ் எல்லாம் சேர்த்து தான், என்னை சென்னைக்கு அழைத்து வந்தன.

Dravid Selvam
Dravid SelvamDude

செல்வம் - கற்பகம் தம்பதியினரிடம் ஒரு வாரத்தில் நான் திரும்பி வருவேன் என்று சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. என்னை ஆதரித்து அனுப்பி வைத்த என் சகோதரி ஜெயகவி, சகோதரி லாவண்யா, சகோதரர் பாண்டிபாலன் ஆகியோருடன் இருந்த அந்த தருணங்கள் அனைத்தும் எனக்கு நினைவிருக்கிறது. இன்று நான் ஒரு படம் செய்ய 8 ஆண்டுகள் ஆகியிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தாலும், உங்களையெல்லாம் இவ்வளவு நேரம் காத்திருக்க வைத்ததற்கு எனக்கு கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கிறது. எனக்கு ஆதரவளித்த அனைத்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் நன்றி.

இப்போது இந்த பதிவு முக்கியமாக `டியூட்' படத்திற்காக. நன்றி PR bro அப்படி ஒரு அன்பான சகோதரன். நம் தருணங்கள் எதையும் நான் மறக்க மாட்டேன் அண்ணா. பவித்ரா நாம் ஒரு அணியாக இருந்தோம் மற்றும் கீர்த்தீஸ்வரன் இயக்குநர் சாரை, ப்ரோவாக மாற்றியதற்கு, ஆரம்பத்தில் இருந்து இறுதி வரைக்கும் என் உடன்  இருந்து நான் நன்றாக செய்கிறேன் என என்னை நம்ப வைத்ததற்கு நன்றி ப்ரோ.

மமிதா என் மீது அன்பு காட்டியதற்கு நன்றி. DOP சார் நிகேத் ப்ரோ, உங்களுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. நன்றி MYTHIRI MOVIE MAKERS தயாரிப்பாளர் அனில் சார், பூர்ணிமா அக்கா எனக்கான சிறந்த ஆடைகளை தேர்வு செய்ததற்காக நன்றி, நடன இயக்குநர் அனுஷா உங்கள் திறமையும், நீங்கள் கொடுத்த ஆதரவும் படத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மிக அதிகம்.

என் வாழ்க்கையின் காதலுக்கு என் மனைவி ராசி. என்னை எப்போதும் அடுத்தகட்டத்துக்கு தள்ளிய பெண். எனக்காக யோசிக்கும், எனக்காக மட்டும் யோசிக்கும் ஒரு ஜீவன். உன்னை பற்றி கூட யோசிக்காமல், நான் ஜெயிக்க வேண்டும் என நீ எவ்வளவு விசயங்ளை இந்த 3 வருடத்தில் தியாகம் செய்துவிட்டு வேலை செய்திருக்கிறாய் என எனக்குத் தெரியும். அன்பே லவ் யூ சோ மச் பேபி. நன் எப்போதெல்லாம் சோர்ந்து போகிறேனோ என்னை தேற்றி இருக்கிறாய், தூக்கிவிட்டிருக்கிறாய், ஒரு குழந்தையை பார்த்துக் கொள்வதைப் போல பார்த்துக் கொண்டாய். நீ என் வாழ்க்கையில் இருப்பதை நினைத்து நான் மகிழ்கிறேன்.

ஆரம்பத்திலேயே மெட்ராஸ் சென்ட்ரல்-லில் சப்போர்ட் கிடைக்க ஆரம்பித்து 8 வருடம், கண்ணா பின்னாவென ஏற்ற இறக்கங்கள். டீம் ஆக தானியாக, நண்பர்களாக, குழுவாக. நிறைய பேர் என் வாழ்க்கையில் ஒவ்வொன்றை கற்றுக் கொடுத்தார்கள். நல்லது, கெட்டது எல்லாத்தும் நன்றி. பரிதாபங்கள் பார்வையாளர்களுக்கு நன்றி. எனக்கு ஆரம்பத்தில் கொடுத்த சப்போர்ட், என்னையும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக்கொண்டதற்கு முதலில் நன்றி. இன்னும் எக்கச்செக்க பேர் சொல்லியும் சொல்லாமலும் விட்டிருக்கிறேன். ஃப்ரெண்ட்ஸ் & ஃபேமிலிக்கும் நான் என்றைக்கும் கடமை பட்டிருக்கிறேன். கோசு அண்ணாஸ் உங்களுக்கு நன்றி கடன்பட்டிருக்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com