OTT - Tamil Cinema
OTTweb

8 வாரம் கழித்து ஓடிடி, ரெவின்யூ ஷேர், வெப்சீரிஸ் கூடாது! - கூட்டுக்குழு தீர்மானங்கள் | OTT | Cinema

இந்தியில் 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியாகிறது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழி திரைத்துறையையும் இம்முடிவுக்கு சம்மதிக்க வைக்க முயற்சி எடுக்க உள்ளோம்.
Published on
Summary

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இணைந்து, திரைப்படங்கள் 8 வாரம் கழித்து ஓடிடியில் வெளியிடப்பட வேண்டும் என முடிவு செய்துள்ளனர். மேலும், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் படத்தில் கமிட்டான பிறகு இணையதள தொடர்களில் பணிபுரியக் கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்படத்துறையில் உள்ள சிக்கல்களை சரி செய்யும் நோக்கில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.ஜி.கே.எம்.தமிழ்குமரன் அவர்களின் தலைமையில், தமிழத் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.டி.ஜி.தியாகராஜன், தமிழ்நாடு திரைப்பட திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.திருப்பூர் சுப்ரமணியம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் திரு.அருள்பதி ஆகியோர் மற்றும் நிர்வாகிகளுடன் இன்று காலை ஒரு கலந்துரையாடல் கூட்டம் சென்னை தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Cinema
Cinema

ஒரு நடிகர், நடிகையர், இயக்குநர், முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் எந்த ஒரு தயாரிப்பாளரிடம் முதலில் அட்வான்ஸ் வாங்குகிறார்களோ, அந்த தயாரிப்பாளருக்கே முன்னுரிமை கொடுத்து திரைப்படத்தினை முடித்துத் தர வேண்டும். காலதாமதம் செய்யக்கூடாது.

திரைப்படங்களில் நடிக்கும் நடிகர், நடிகையர், இயக்குநர், முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், இணையதள தொடர்களில் நடிக்கவோ, இயக்கவோ செல்லக்கூடாது. அவ்வாறு செல்லும் நடிகர், நடிகையர், முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் திரைப்படங்களில் பணிபுரிய ஒத்துழைப்பு வழங்கப்படாது.

OTT - Tamil Cinema
'நான் தயாரித்த படங்கள் எல்லாமே நஷ்டம் தான்..' - விஜய் சேதுபதி | Vijay Sethupathi

முன்னணி நடிகர்கள் ரெவின்யூ ஷேர் முறையில் நடிப்பதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

திரையரங்கில் வெளியாகும் படங்களை 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என முடிவெடுத்துள்ளோம். இந்தியில் 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியாகிறது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழி திரைத்துறையையும் இம்முடிவுக்கு சம்மதிக்க வைக்க முயற்சி எடுக்க உள்ளோம்.

இந்த தீர்மானங்களை அமல்படுத்த விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் அடங்கிய கூட்டுக்குழு (Joint Action Committee) அமைப்பது என்றும், இந்த கூட்டுக்குழு எடுக்கும் முடிவுக்கு திரைத்துறையினர் கட்டுப்பட வேண்டும் என்றும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

OTT - Tamil Cinema
”8வது நாளில் நான் இறந்துவிட்டால் என்ன செய்வீர்கள்?” - விஜய் சேதுபதி பகிர்ந்த வேதனை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com