Netflix
NetflixNew Release

பாலாஜி மோகன் கம்-பேக், க்ரைம் த்ரில்லரில் மாதவன்... நெட்ஃப்ளிக்ஸின் புது ரிலீஸ்! | Netflix

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் புதிதாக வெளியிட உள்ள படங்கள் மற்றும் சீரிஸ்களை அறிவித்துள்ளது.

1. LOVE:

Love
LoveBalaji Mohan

பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ் `லவ்'. மாரி 2 படத்திற்கு பின் 8 ஆண்டுகள் கழித்து பாலாஜி மோகன் இயக்குநராக கம்-பேக் கொடுத்திருக்கிறார். எதிரெதிர் துருவமாக இருக்கும் ஒரு ஜோடி டேட்டிங் ஆப் மூலம், பழக ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் காதலில் நடக்கும் சிக்கல்களே இதன் கதை.

2. Legacy

Legacy
LegacyMadhavan, Nimisha

இயக்குநர் சாருகேஷ் சேகரின் வெப்சீரிஸ் 'லெகஸி'. இதில் ஆர். மாதவன், நிமிஷா சஜயன், கௌதம் கார்த்திக், குல்ஷன் தேவையா மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் நடிக்கின்றனர். வலுவான குற்றப் பின்னணியைக் கொண்ட குடும்ப தலைவர், தனது சாம்ராஜ்யத்தை ஒரு பிரச்சினையில் இருந்து பாதுகாக்க, தகுதியான வாரிசை நியமிக்கப் போராடுகிறார். வாரிசுரிமையை மையமாகக் கொண்டு நகரும் த்ரில்லராக உருவாகி இருக்கிறது இந்த சீரிஸ்.

3. Super Subbu

Super Subbu
Super SubbuSandheep Kishan

`டில்லு ஸ்கொயர்' இயக்கிய மாலிக் ராம் இயக்கியுள்ள தெலுங்கு சீரிஸ் 'சூப்பர் சுப்பு'. சந்தீப் கிஷன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். கிராமபுறத்தில் பாலியல் கல்வி கற்பிக்கும் பணியில் சேரும் இளைஞனின் வாழ்க்கையில் நடப்பவையே கதை.

4. Stephen

Stephen
StephenMithun

அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள படம் 'ஸ்டீபன்'. மனநல மருத்துவர் ஒருவர், தொடர் கொலைகள் செய்துவரும் ஒரு கொலையாளியை, மதிப்பிடுகிறார். இதில் நடப்பவற்றை மையமாக வைத்து ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கிறது இப்படம்.

5. Made In Korea

MadeInKorea
MadeInKoreaPriynaka Mohan

`நித்தம் ஒரு வானம்' பட இயக்குநர் ரா கார்த்திக் இயக்கியுள்ள படம் 'மேட் இன் கொரியா'.  'ஸ்க்விட் கேம்' புகழ் பார்க் ஹை-ஜினுடன் பிரியங்கா மோகன் இதில் நடித்துள்ளார். தன்னுடைய கனவுப்பயணம் ஒன்றில் தடம்புரண்ட ஒரு இளம் பெண், எப்படி நம்பிக்கையை கண்டடைகிறாள் என்பதே கதை.

6. Takshakudu

Takshakudu
TakshakuduAnand Devarakonda

வினோத் அனந்தோஜு இயக்கத்தில் ஆனந்த் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு த்ரில்லர் படம் 'தக்‌ஷகுடு'. பார்வை சவால் கொண்ட இளைஞன், தனது கிராமவாசிகளின் மரணத்திற்குப் பழிவாங்கப் புறப்படுகிறார் என்பதுதான் கதை. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com