NEEK ஹீரோவின் புதிய படம்! | Pavish | Dhanush
தனுஷ் இயக்கிய `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பவிஷ். அடுத்ததாக நடிக்கும் படத்திற்கு ஆறு மாதங்களாக கதைகளை கேட்டு வந்தவர், இப்போது ஒரு படத்தில் நடிக்க துவங்கி இருக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.
இப்படத்தை இயக்குநரும், பவிஷின் தாத்தாவுமான கஸ்தூரிராஜா கிளாப் அடித்து துவங்கி வைத்து படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். தெலுங்கு திரைப்பட நடிகை மற்றும் யூடியூப் பிரபலமான நாகா துர்கா இப்படத்தில் நாயகியாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இப்படத்தை லக்ஷ்மன் இயக்கிய “போகன்” மற்றும் “பூமி” போன்ற படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய மகேஷ் ராஜேந்திரன் இயக்குகிறார். இது ஒரு ரொமான்டிக் படமாக உருவாகிறது.
இப்படத்திற்கு பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு, என்.பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு, மகேந்திரன் கலை இயக்கம், ஹர்ஷிகா ஆடை வடிவமைப்பாளர், அபிஷேக் சண்டைபயிற்சி என பலமான குழு இணைந்துள்ளனர். Zinema Media and Entertainment Ltd. சார்பில் தினேஷ் ராஜ் வழங்க, Creative Entertainers & Distributors நிறுவனத்தின் மூலம் ஜி. தனஞ்செயன் இணைந்து தயாரிக்கிறார். இன்று (அக்டோபர் 27, 2025) சென்னையில் பூஜையுடன் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொள்ள இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று, 2026 தொடக்கத்தில் முடிவடையும் படி திட்டமிடப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

