லியோ தொடர்பாக புகார் வந்தால்...? செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் சொன்ன பதில்!

“பொதுவாக கூறக்கூடிய குற்றச்சாட்டுகளுக்கு அனுமானமாக பதில் கூற முடியாது” - அமைச்சர் சாமிநாதன்
லியோ
லியோPT

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஒலி ஒளி காட்சியினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

அமைச்சர் சாமிநாதன்
அமைச்சர் சாமிநாதன்

அதன்பின் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் சாமிநாதன், “லியோ பட பிரச்னைகள் தொடர்பாக இப்போதுவரை பொதுவான குற்றச்சாட்டுகள்தான் வருகின்றன. பொதுவாக கூறக்கூடிய குற்றச்சாட்டுகளுக்கு அனுமானமாக பதில் கூற முடியாது. பிரச்னை என்னவென்று புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.

முன்னதாக நேற்று மாலை சென்னை ரோஹினி திரையரங்கில் விஜய் நடித்த LEO படத்தின் ட்ரெய்லர் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், ரசிகர்கள் ஆர்வத்தின் மிகுதியால் தடுப்புகளை உடைந்துகொண்டு உள்ளே நுழைந்த சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

லியோ
லியோ ட்ரெய்லரை பார்க்க தடுப்புகளை உடைத்து தியேட்டருக்குள் புகுந்த ரசிகர்கள்! சென்னையில் பரபரப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com