மார்க் ஆண்டனி
மார்க் ஆண்டனிTwitter

விஷாலுக்கு அடித்துள்ள ஜாக்பாட்! மார்க் ஆண்டனி பயன்படுத்துமா?

இந்த வாரம் தமிழில் இருந்து விஷாலின் 'மார்க் ஆண்டனி' படம் மட்டும் சோலோ ரிலீசாக வெளியாகிறது.
Published on

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' படம் செப்டம்பர் 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. சில சட்டப் பிரச்னைகள் வந்த போதும் அதையும் தாண்டி, படம் வெளியாக இருந்த தடைகள் நீங்கி, சொன்னபடி 15ம் தேதி வெளியாகவுள்ளது.

சந்திரமுகி 2
சந்திரமுகி 2@LycaProductions twitter

சென்ற வாரம் இந்திப் படமான 'ஜவான்', தெலுங்கு 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலிஷெட்டி' போன்ற படங்கள் வெளியானாலும் தமிழில் எந்தப் படமும் வெளியாகவில்லை. இந்த வாரம் விநாயகர் சதுர்த்தி விடுமுறை வருவதால் அதைக் குறி வைத்து விஷாலின் 'மார்க் ஆண்டனி'யும், ராகவா லாரன்ஸின் 'சந்திரமுகி 2' படமும் வெளியாவதாக இருந்தது. ஆனால் VFX பணிகள் நிறைவடையாததால் 'சந்திரமுகி 2' செப்டம்பர் 28ம் தேதிக்கு தள்ளிப் போகிறது என படக்குழு அறிவித்தது.

எனவே இந்த வாரம் தமிழில் இருந்து விஷாலின் 'மார்க் ஆண்டனி' படம் மட்டும் சோலோ ரிலீசாக வெளியாகிறது.

மார்க் ஆண்டனி
மார்க் ஆண்டனிட்விட்டர்

வெள்ளிக்கிழமை படம் வெளியாகிறது, வார இறுதியான சனி, ஞாயிறு மேலும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு செப் 18 விடுமுறை என மிகச் சிறப்பான நேரத்தில் வெளியாகவுள்ளது. இதில் இன்னும் ஒரு வசதியாக செப் 28 வரை வேறு எந்த பெரிய தமிழ்ப் படங்களும் (தற்போது வரை அறிவிக்கப்படவில்லை) வெளியாகவில்லை.

ஆகவே 'மார்க் ஆண்டனி' மட்டும் ரசிகர்களிடம் வரவேற்பு பெரும் பட்சத்தில், படம் மிகப்பெரிய வசூலை குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com