இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு சொகுசு கார் பரிசளித்த தயாரிப்பாளர்!

'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தயாரிப்பாளர் சொகுசு கார் பரிசளித்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன்
ஆதிக் ரவிச்சந்திரன்x வலைதளம்

விஷால், எஸ்.ஜே சூர்யா, ரித்து வர்மா, செல்வராகவன், ஒய்.ஜி.மகேந்திரன் உட்பட பலர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியானது மார்க் ஆண்டனி திரைப்படம். வினோத் குமார் தயாரித்திருந்த இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படம் வெற்றிபெற்ற நிலையில், அதை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

ஆதிக் ரவிச்சந்திரன்
Mark Antony review | மாத்தி மறந்து மாறிப்போய் வர வச்சுட்டீங்க SJ சூர்யா & டீம் ... செம்ம..!
ஆதிக் ரவிச்சந்திரன்
ஆதிக் ரவிச்சந்திரன்x வலைதளம்

இதன் தொடர்ச்சியாக படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு, தயாரிப்பாளர் வினோத் குமார் பி.எம்.டபிள்யூ கார் ஒன்றை பரிசளித்துள்ளார். 

இதை தமது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆதிக் ரவிச்சந்திரன், விஷால், எஸ்.ஜே சூர்யா, ஜி.வி பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com