மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ்web

"பொது சமூகத்தின் குரலாக எனது படைப்புகள் ஒலிக்க வேண்டும் என்பதே ஆசை" - மாரி செல்வராஜ்

சேலம் அரசு கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் மாணவர்களிடையே கலந்துரையாடினார்.
Published on

சேலம் அரசு இருபாலர் கலைக்கல்லூரி ஆங்கிலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் மாரிசெல்வராஜ் பங்கேற்றார். மாணவ மாணவியரிடையே  உரையாற்றிய அவர், நான் காலேஜ் விட்டு ஓடிப்போன பையன் ஆனால், இப்போது பேராசிரியர்கள் முன்பு பேசுவது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. திரைத்துறையில் எனக்கு கிடைத்த சிறந்த ஆசிரியர் ராம்; அடைவோமா? மாட்டோமோ? என எனக்கு தெரியாது ஆனால் ஒரு பெருங்கனவு இருந்தது.

இதனால்தான் திரைத்துறையை தேர்ந்தெடுத்தேன்..

பரியேறும் பெருமாளும் கர்ணனும் வேறுவேறு பாதிப்புக்குள்ளானவர்கள். எனவே இரண்டையும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. பரியேறும்பெருமாள் தோல்வியடைந்திருந்தால் இன்னொருவர் அதுபோன்ற கதையை யோசிக்கவே மாட்டார். அப்படத்தின் வெற்றி அதனைத்தொடர்ந்து வலிகள் நிறைந்த கதைகளை படமாக்கியது தற்போது பல இயக்குநர்களுக்கு சிக்கலாகிவிட்டது.

என்னோடு என்னைவிட வலிமிகுந்த மனிதர்கள் இந்த சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதால்தான் கலைத்துறையை தேர்ந்தெடுத்தேன். என் அப்பா மூட நம்பிக்கையாளர், பேய் ஓட்டுபவர், என் அப்பா ஒரு சமுக அடையாளமாக இல்லை என வருத்தம் இருந்தது.

என் அப்பா என்னை எங்கும் அழைத்துச் சென்றதில்லை. ஆனால் நீ போ என என்னை அனுப்பி வைத்தார். பிள்ளைகளை ஆளாக்க வேண்டும் என்பதற்காகவே நம்பிக்கை இருக்கிறதோ? இல்லையோ? கடவுளை பிடித்துக் கொண்டார் என்பதை தற்போது நான் புரிந்து கொண்டேன்.

தலித் குரல், பொது சமூக குரல் என்று எதுவுமில்லை..

ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் என்றால் அதை எங்கிருந்து தொடங்க வேண்டும் என்ற நிலை இப்போதும் இருக்கிறது. இன்றைய சூழலில் தொழில்நுட்பமும் அறிவியலும் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது.

சமூகத்திற்கு அநீதியான கருத்துகளை பதிவுசெய்தால் அவரை புரட்டி எடுக்கும் அளவிற்கு அறிவியல் வளர்ந்துள்ளது.

மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ்

சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு, காமெடி படங்களை எடுக்க படிக்கத் தேவையில்லை, யோசிக்கத் தேவையில்லை. நான் இயக்கிய படத்தை பார்த்துவிட்டேன் என என் ஆசிரியர்களும், பேராசிரியர்களும் சொல்வதுதான் வெற்றி. மறைமுகமாக எனக்காக ஒலிக்கின்ற குரல்களே எனது பெருமை என நினைக்கிறேன்.

தலித் குரல், பொது சமூக குரல் என்று எதுவுமில்லை அனைத்தும் மானுட குரல்தான். பொது சமூகத்தின் குரலாக என் படைப்புகளை மாற்ற வேண்டும் என்பதே எனது ஆசை” என மாரிசெல்வராஜ் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com