விமலின் `வடம்' to Guy Ritchieயின் Young Sherlock இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ்! | Vimal

இந்த வாரம் தியேட்டரில் விமலின் `வடம்', ஓடிடியில் Guy Ritchieயின் Young Sherlock உட்பட பல வகை படைப்புகள் வெளியாகவுள்ளன.
This Week's Release
Vadam, Boongpt

1. Series: Marshals (English) Jio Hotstar- Mar 1

Marshals
Marshals

Luke Grimes நடித்துள்ள சீரிஸ் `Marshals'. Montana என்ற பகுதியை காக்க போராடும் ஒரு முன்னாள் கடற்படை வீரன் மற்றும் பண்ணை உரிமையாளரின் கதை.

2. DTF St. Louis (English) Jio Hotstar- Mar 1

DTF St Louis
DTF St Louis

Steven Conrad இயக்கியுள்ள சீரிஸ் `DTF St. Louis'. ஒரு முக்கோண காதல் கதையை காமெடி கலந்து சொல்லும் சீரிஸ்.

3. Young Sherlock (English) Prime - Mar 4

Young Sherlock
Young Sherlock

Guy Ritchie இயக்கியுள்ள சீரிஸ் `Young Sherlock'. பிரபல துப்பறியும் நிபுணர் ஷெர்லாக் ஹோல்ம்ஸின் இளமை காலத்து அட்வென்ச்சர்களை சொல்கிறது.

4. Hello Bachhon (Hindi) Netflix - Mar 6

Hello Bachhon
Hello Bachhon

ப்ரதிஷ் மெஹ்தா இயக்கியுள்ள சீரிஸ் `Hello Bachhon'. ஒரு இயற்பியல் ஆசிரியர் தனது மாணவர்களுக்கு எப்படி உத்வேகம் தருகிறார் என்பதே கதை.

5. OTT: Subedaar (Hindi) Prime - Mar 4

Subedaar
Subedaar

சுரேஷ் த்ரிவேணி இயக்கத்தில் அணில் கபூர் நடித்துள்ள படம் `Subedaar'. நாட்டை காக்க போராடிய ராணுவ வீரர், தன குடும்பத்தை காக்க போராடும் போராட்டமே கதை.

This Week's Release
ஆரம்பிக்கலாமா.. துவங்கியது `தலைவர் 173' | Rajinikanth | Thalaivar 173 | Cibi Chakaravarthi

6. War Machine (English) Netflix - Mar 6

War Machine
War Machine

Patrick Hughes இயக்கியுள்ள படம் `War Machine'. இராணுவ குழுவுடன் மோதும் வேற்றுலக எதிரிகள் பற்றிய கதை.

7. Post Theatrical Digital Streaming: Good Fortune (English) Prime - Mar 1

 Good Fortune
Good Fortune

Aziz Ansari இயக்கத்தில் Keanu Reeves நடித்த படம் `Good Fortune'. கேப்ரியல் வாழ்வில் நடக்கும் வித்தியாசமான விஷயங்களே கதை.

8. Tanvi The Great (Hindi) Prime - Mar 3

Tanvi The Great
Tanvi The Great

அனுபம் கெர் இயக்கியுள்ள படம் `Tanvi The Great'.  Autism பாதிப்புள்ள 21 வயது பெண், இமயமலை ஏறும் பயணமே கதை.

9. With Love (Tamil) Netflix - Mar 6

With Love
With Love

அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா நடித்த படம் `வித் லவ்'. தங்கள் முன்னாள் காதலர்களை சந்திக்க செல்லும் ஒரு ஜோடியின் கதை.

10. Laalo – Krishna Sada Sahaayate (Gujarati) SonyLIV - Mar 6

Laalo
Laalo

அங்கித் இயக்கிய படம் `Laalo – Krishna Sada Sahaayate'. ஒரு ரிக்ஷ டிரைவர் - கடவுள் விஷ்ணு இடையிலான விஷயங்களே படத்தின் கதை.

11. Dheeram (Malayalam) Sun NXT - Mar 6

Dheeram
Dheeram

ஜிதின் இயக்கியுள்ள படம் `Dheeram'. தொடர் கொலைகள் செய்யும் கொலைகாரனை தேடும் போலீஸ் அதிகாரியின் கதை.

12. Theatre: Kadhal Reset Repeat (Tamil) - Mar 6

Kadhal Reset Repeat
Kadhal Reset Repeat

விஜய் இயக்கியுள்ள படம் `Kadhal Reset Repeat'. ஒரே ஒரு நாள் மட்டுமே ஞாபகம் வைத்துக் கொள்ளும் சிக்கல் உள்ள ஒரு பெண்ணின் காதல் கதை.

13. Oh Butterfly (Tamil) - Mar 6

Oh Butterfly
Oh Butterfly

விஜய் ரங்கநாதன் இயக்கியுள்ள படம் `Oh Butterfly'. தன் கணவருடன் ஹில்ஹவுஸ் செல்லும் ஒரு பெண் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களே கதை.

14. Vadam (Tamil) - Mar 6

Vadam
Vadam

விமல் நடித்துள்ள படம் `வடம்'. செய்யாத குற்றத்துக்காக சிறை செல்லும் ஹீரோவின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதே கதை.

15. 99/66 (Tamil) - Mar 6

99/66
99/66

ரச்சிதா நடித்துள்ள படம் `99/66'. புது வீட்டுக்கு கூடிவரும் புதுமண தம்பதிகள் சந்திக்கும் அமானுஷ்ய விஷயங்களே கதை.

16. Mustafa Mustafa (Tamil) - Mar 6

Mustafa Mustafa
Mustafa Mustafa

சதீஷ் நடித்துள்ள படம் `முஸ்தபா முஸ்தபா'. திருமணம் செய்யப் போகும் இளைஞனுக்கு சிக்கலாக வரும் ஒரு வீடிவோவும், அதை சமாளிப்பதுமே கதை.

17. Mrithyunjay (Telugu) - Mar 6

Mrithyunjay
Mrithyunjay

ஸ்ரீ விஷ்ணு நடித்துள்ள படம் `Mrithyunjay'. ஒரு மரணத்தை விசாரிப்பதில் தெரியும் மர்மங்களே கதை .

18. Faces (Malayalam) - Mar 6

Faces
Faces

காளீஷ், ஹென்னா நடித்துள்ள படம் `Faces'. தீ விபத்து ஒன்றுக்கு பிறகு நித்யாவின் வாழ்க்கை என்ன ஆகிறது என்பதே கதை.

19. Boong (Manipuri) - Mar 6

Boong
Boong

லட்சுமி ப்ரியா தேவி இயக்கியுள்ள படம் `Boong'. தன் அம்மாவுக்கு பரிசு கொடுக்க சிறுவன் செல்லும் பயணமே கதை.

20. The Bride (English) - Mar 6

The Bride
The Bride

Maggie Gyllenhaal இயக்கியுள்ள படம் `The Bride'. Frankenstein க்கு ஒரு துணை தேவைப்பட, கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணை உயிருடன் கொண்டு வருகிறார்கள். அதன் பின் நடப்பவையே கதை.

21. Hoppers (English) - Mar 6

Hoppers
Hoppers

Daniel Chong இயக்கியுள்ள அனிமேஷன் படம் `Hoppers'. 19 வயது விலங்கு ஆர்வலர் ஒருவரின் ஆராய்ச்சி தான் கதை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com