விஜய் சேதுபதியின் `காட்டான்' to ஜிவி பிரகாஷின் `Happy Raj' ... இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ்!

இந்த வாரம் தியேட்டரில் ஜிவி பிரகாஷின் `Happy Raj', ஓடிடியில் விஜய் சேதுபதியின் `காட்டான்' உட்பட பல வகை படைப்புகள் வெளியாகவுள்ளன.
Kaataan, Happy Raj
Kaataan, Happy RajThis Weeks Release

1. Series: Daredevil Born Again S2 (Hindi) Jio Hotstar - Mar 25

Daredevil Born Again
Daredevil Born Again

Charlie Cox நடித்துள்ள சீரிஸ் `Daredevil: Born Again'. இதன் இரண்டாவது சீசன் வெளியாகிறது. நகரத்தை காப்பாற்றும் ஒரு சூப்பர் ஹீரோ கதைதான் களம்.

2. Bait (English) Prime- Mar 25

Bait
Bait

Riz Ahmed நடித்துள்ள சீரிஸ் `Bait'. ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்திற்கு ஆடிஷன் செல்லும் ஒரு நடிகரின் கதை.

3. Something Very Bad Is Going to Happen (English) Netflix- Mar 26

Something Very Bad Is Going to Happen
Something Very Bad Is Going to Happen

Camila Morrone நடித்துள்ள சீரிஸ் `Something Very Bad Is Going to Happen'. ரேச்சல் - நிக்கிக்கு ஒரு வாரத்தில் திருமணம். இதற்குள் நடக்கும் சில பிரச்சனைகளே கதை.

4. Kaataan (Tamil) Jio Hotstar - Mar 27

Kaataan
Kaataan

மணிகண்டன் - அஜித்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள சீரிஸ் `காட்டான்'. உடல் இல்லாமல் துண்டாக கிடைக்கும் தலை யாருடையது என விசாரிக்கும் காவலர்கள் செல்லும் பயணமே கதை.

5. OTT: Pretty Lethal (English) Prime - Mar 26

Pretty Lethal
Pretty Lethal

Vicky Jewson இயக்கியுள்ள படம் `Pretty Lethal'. நடனப்போட்டிக்கு செல்லும் ஒரு குழுவின் பேருந்து பிரேக் டவுன் ஆன பின் நடக்கும் சம்பவங்களே கதை.

Kaataan, Happy Raj
தியேட்டர் & யூடியூபில் ஹிட், இப்போ ஓடிடி ரிலீஸ்... அமீர்கானின் மாஸ்டர் ப்ளான்! | Sitaare Zameen Par

6. Post Theatrical Digital Streaming: Written & Directed by God (Malayalam) manoramaMAX - Mar 22

Written & Directed by God
Written & Directed by God

சைஜு குரூப், சன்னி வெய்ன் நடித்துள்ள படம் `Written & Directed by God'. கடவுளை சந்திக்கும் ஒரு சினிமா இயக்குநர் எதிர்கொள்ளும் மாற்றங்களே கதை.

7. The Astronaut (English) Jio Hotstar - Mar 23

The Astronaut
The Astronaut

Jess Varley இயக்கியுள்ள படம் `The Astronaut'. விண்வெளியில் இருந்து திரும்பும் விண்வெளி வீராங்கனை எதிர்கொள்ளும் சிக்கல்களே கதை.

8. Mercy (English) Prime- Mar 23

Mercy
Mercy

Chris Pratt, Rebecca Ferguson நடித்துள்ள படம் `Mercy'. தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்படும் கணவனுக்கு, தான் குற்றமற்றவர் என நிரூபிக்க 90 நிமிடங்கள் அளிக்கப்படுகிறது. அதற்குள் நடக்கும் விஷயங்களே கதை.

9. Sabdham (Tamil) Zee5 - Mar 26

Sabdham
Sabdham

அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடித்த படம் `சப்தம்'. சத்தத்தின் மூலமாக பல கொலைகள் நடக்க, அதன் மர்மத்தை கன்டுபிடிக்க முயலும் ஹீரோவின் கதை.

10. Maaya Bimbum (Tamil) Sun NXT - Mar 27

Maaya Bimbum
Maaya Bimbum

சுரேந்தர் இயக்கிய படம் `மாயபிம்பம்'. ஒரு காதலில் வரும் சிக்கல்கள் பற்றிய கதை.

Kaataan, Happy Raj
திரைப்படமாகும் ’ஆபரேசன் சிந்தூர்’.. இயக்கவிருக்கும் ’Kashmir Files’ இயக்குநர்!

11. Masthishka Maranam (Malayalam) Netflix - Mar 27

Masthishka Maranam
Masthishka Maranam

ரஜிஷா விஜயன் நடித்த படம் `Masthishka Maranam'. சைன்ஸ் ஃபிக்ஷன் உலகில் நடக்கும் ஒரு எமோஷனல் கதை.

12. Valathu Vashathe Kallan (Malayalam) manoramaMAX - Mar 27

Valathu Vashathe Kallan
Valathu Vashathe Kallan

ஜீத்து ஜோசப் இயக்கிய படம் `Valathu Vashathe Kallan'. காவலதிகாரி ஆண்டனி சேவியர் ஒரு உண்மையை கண்டுபிடிக்க முயல்வதே கதை.

13. Mardaani 3 (Hindi) Netflix - Mar 27

Mardaani 3
Mardaani 3

ராணி முகர்ஜி நடித்த படம் `Mardaani 3'. இம்முறை காவலர் சிவாஜி ஷிவானி ராய் தீர்க்கும் வழக்கு என்ன என்பதே கதை.

14. Theatre: Band Melam (Telugu) - Mar 26

Band Melam
Band Melam

ஹர்ஷ், ஸ்ரீதேவி நடித்துள்ள படம் `Band Melam'. சிறு வயதில் பிரிந்த கிரி - ராஜி மீண்டும் சந்திக்கும் போது என்ன நடக்கிறது என்பதே கதை.

15. Prathichaya (Malayalam) - Mar 26

Prathichaya
Prathichaya

நிவின் பாலி நடித்துள்ள படம் `Prathichaya'. தந்தையின் அரசியல் செல்வாக்கை காக்கும் பொறுப்பு மகனுக்கு வரும் போது என்ன நடக்கிறது என்பதே கதை.

Kaataan, Happy Raj
`முத்து என்கிற காட்டான்' சீரிஸ் செய்தியாளர் சந்திப்பு ஆல்பம்! | Vijay Sethupathi | Kaataan

16. Happy Raj (Tamil) - Mar 27

Happy Raj
Happy Raj

ஜிவி பிரகாஷ், கௌரி ப்ரியா நடித்துள்ள படம் `ஹேப்பி ராஜ்'. தன் குடும்பத்தையும், காதலியின் குடும்பத்தையும் சமாளிக்கும் ஹீரோவின் கதை.

17. Nee Forever (Tamil) - Mar 27

Nee Forever
Nee Forever

சுதர்ஷன், அர்ச்சனா நடித்துள்ள படம் `Nee Forever'. தங்களுடைய சுய நலத்துக்காக காதலிக்கும் இருவரின் கதை.

18. Satan: The Dark (Tamil) - Mar 27

Satan: The Dark
Satan: The Dark

ஆர்யா பாலக், சாந்தினி, ஃபிரெட்ரிக் நடித்துள்ள படம் `Satan: The Dark'. அஸ்தினாபுர கிராமத்தின் அமானுஷ்யங்களே கதை.

19. Project Hail Mary (English) - Mar 26

Project Hail Mar
Project Hail Mar

Ryan Gosling நடித்துள்ள படம் `Project Hail Mary'. பூமிக்கு வரும் ஆபத்தை சரி செய்ய விண்வெளி செல்லும் நாயகனின் கதை.

20. They Will Kill You (English) - Mar 27

They Will Kill You
They Will Kill You

Zazie Beetz நடித்துள்ள படம் `They Will Kill You'. வீட்டு வேலை செய்ய செல்லும் பெண்ணுக்கு வரும் ஆபத்தும், அதிலிருந்து அவர் எப்படி தப்புகிறார் என்பதுமே கதை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com