\
Mansoor Ali Khan Upset Over Deleted Karuppu Scenes
மன்சூர் அலிகான்Pt web

”கஷ்டப்பட்டு ஆடினேன்” கருப்பு படத்தில் காட்சிகள் நீக்கம் - மன்சூர் அலிகான் ஆவேசம்!!

கருப்பு படத்தில் தான் நடித்திருந்த காட்சிகள் நீக்கப்பட்டதற்கு நடிகர் மன்சூர் அலிகான் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
Published on

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்ய நடித்து கடந்த மே மாதம் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ’கருப்பு’. இந்த திரைப்படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் நடித்திருந்த நிலையில், அவர் நடித்த பல காட்சிகள் நீக்கப்பட்டதாகவும், யூடியூபில் வெளியிடுவதாக கூறி வெளியிடவில்லை எனவும் தற்போது குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி சென்னை வடபழனி பிரசாத் லேபில் தர்ஷன் ஜெயபிரகாஷ் மற்றும் பிக்பாஸ் ஜனனி ஆகியோர் நடத்துள்ள “ஆல் பாஸ்” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டு பேசினார்.

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்Pt web

அப்போது பேசிய அவர், கருப்பு தான் கஷ்டப்பட்டு நடித்த காட்சிகள் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. ’நாங்க நாலு பேரு’ என்ற பாடலில் சிரமப்பட்டு ஆடினோம். ஆனால், நேரமின்மை காரணமாக அந்த காட்சிகள் ஏன் நீக்கப்பட்டதாகவும், யூடியூப் தளத்தில் வெளியிடுவதாகவும் அப்படத்தின் தயாரிப்பாளர் கூறினார். ஆனால், வெளியிடவில்லை. அதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, பொறுப்பில்லாமல் பதில் சொல்கிறார்.

Mansoor Ali Khan Upset Over Deleted Karuppu Scenes
தள்ளிப்போகும் துல்கரின் ’I Am Game’ | Dulquer Salmaan | DQ 40

திரையுலகில் பல ஆண்டுகளாக பயணித்து வருகிறேன். 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். தயாரிப்பாளராகவும் இருந்துள்ளேன். நீண்ட அனுபவம் கொண்ட தன்னை ஒரு காட்சியில் வெறுமனே நிற்க வைத்து வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். எனக்கே இந்த நிலைமை என தெரிவித்தார்.

மேலும், தற்போதைய திரைப்படங்களில் பல ஹீரோக்கள் வெறும் பில்டப் மூலமாகவே தங்களது வாழ்க்கையை நடத்தி வருவதாக விமர்சித்த மன்சூர் அலிகான், தான் யாரிடமும் பிச்சை எடுக்கவில்லை என்றும், தனது உழைப்பால் உயர்ந்தவர் என்றும் தெரிவித்திருக்கிறார்.

Mansoor Ali Khan Upset Over Deleted Karuppu Scenes
இயக்குநராக மகுடம் சூடினாரா விஷால்? | Magudam Review | Vishal
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com