விரைவில் துவங்கும் மணிரத்னம் - விஜய் சேதுபதி படம்! | Maniratnam | Vijay Sethupathi
இயக்குநர் மணிரத்னம் அடுத்ததாக விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிப்பில் படத்தை இயக்க இருக்கிறார். இதற்குமுன் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து கடந்த ஆண்டு வெளியான `தக் லைஃப்' படம் பெரிய தோல்வி அடைந்தது. அதன்பின் முழுக்க புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்பட்டது.
அதன் பின்னர் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை, தான் இயக்க உள்ளார் எனச் சொல்லப்பட்டது, விஜய் சேதுபதியும் சில பேட்டிகளில் அதனை உறுதி செய்தார். கடந்த மார்ச் மாதம் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படத்தை லைகா உடன் இணைந்து தயாரிக்கிறார் மணிரத்னம். அவரிட்ன் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மே இரண்டாவது வாரத்தில் சென்னையில் துவங்க உள்ளது எனச் சொல்லப்படுகிறது. அதை தவிர, இப்போது சினிமா அறிவிப்புகளை ஒரு புரோமோ வெளியிட்டு அறிவிப்பதுதான் ட்ரெண்ட் என்பதால், படத்துக்காக ஒரு புரோமோவும் ஷூட் செய்ய இருக்கிறாராம் மணி. அதன் படப்பிடிப்பு இந்த மாதத்தில் இரண்டு நாட்கள் நடக்க உள்ளதாம். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 23ஆவது படமாக உருவாகும் இப்படத்தில் மணிரத்னத்தின் புதிய தயாரிப்பு நிறுவனமான இந்தியா டாக்கீஸ் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது.

