Mammootty comes back to kollywood after 7 years
Mammootty, DhanushD55

தனுஷ் படத்தில் மம்மூட்டி.. வெளியானது அறிவிப்பு! | D55 | Dhanush | Mammootty

மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரம் மம்மூட்டி, மது இயக்கத்தில் 1990ல் வெளியான `மௌனம் சம்மதம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர்.
Published on

தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகும் படம் `D55'. இதில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிப்பதுடன் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் மூலம் படத்தை தயாரிக்கவும் செய்கிறார் தனுஷ்.

இந்தப் படத்தில் தற்போது மம்மூட்டி இணைந்துள்ளதை அறிவித்துள்ளது படக்குழு. மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரம் மம்மூட்டி. அவர் பல தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். மது இயக்கத்தில் 1990இல் வெளியான `மௌனம் சம்மதம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மம்மூட்டி தொடர்ந்து `அழகன்', `தளபதி', `மறுமலர்ச்சி', `எதிரும் புதிரும்', `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்', `ஆனந்தம்' எனப் பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக ராம் இயக்கத்தில் 2019இல் வெளியான `பேரன்பு' படத்தில் நடித்திருந்தார்.

Mammootty comes back to kollywood after 7 years
வசூல் சாதனைகளை முறியடித்த `துரந்தர்'.. வெளியான பார்ட் 2 டீசர்! | Dhurandhar The Revenge

இப்போது 7 வருடங்கள் கழித்து மீண்டும் `D55' மூலம் தமிழ் சினிமாவுக்கு திரும்பி இருக்கிறார் மம்மூட்டி. 2013இல் மம்மூட்டி, திலீப் நடித்த `Kammath and Kammath' என்ற மலையாள படத்தில் தனுஷ் ஒரு கேமியோ ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Mammootty, Dhanush
Mammootty, DhanushD55

`D55' படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. மேலும் இதன் படப்பிடிப்பு பிப்ரவரி 10ஆம் தேதி துவங்கவுள்ளது. தனுஷ் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள `கர' படம் சம்மர் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது `D55' துவங்கியுள்ளதால், இந்தப்படமும் இந்தாண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com