Madhavan
MadhavanG D Naidu

ஜி.டி. நாயுடுவாக மாதவன்... வரவேற்பு பெரும் புதிய போஸ்டர்! | G D Naidu | Madhavan

ஜி.டி. நாயுடு பயோபிக்கின் படப்பிடிப்பு அவர் பிறந்த இடமான கோயம்புத்தூரில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
Published on

மாதவன் நடிப்பில் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஜிடிஎன்'. ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகிவரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.

`ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்' படத்தில் நம்பி நாராயணனாக நடித்த மாதவன் மீண்டும் ஒரு பயோபிக்கில் நடித்து வருகிறார். ஜி.டி. நாயுடு போன்று அவர் தன்னை மாற்றிக் கொண்டு இருக்கும் இந்த போஸ்டர் கவர்ந்துள்ளது. "இந்தியாவின் எடிசன்" என்று அடிக்கடி புகழப்படும் ஜி.டி. நாயுடு, பெட்ரோல் எஞ்சின்கள் முதல்  டிக்கெட் இயந்திரங்கள் வரை பலவற்றை கண்டுபிடித்து இந்தியத் தொழில்துறையில் புரட்சியை ஏற்படுத்தினார். தமிழ்நாட்டின் மிக நீளமான பாலத்திற்கும் அவரது பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஜி.டி. நாயுடு பயோபிக்கின் படப்பிடிப்பு அவர் பிறந்த இடமான கோயம்புத்தூரில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்தப் படத்தில் நடிகர்கள் சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், தம்பி ராமையா மற்றும் வினய் ராய் உள்ளிட்ட பலர் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். வர்கீஸ் மூலனின் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ஆர். மாதவன் மற்றும் சரிதா மாதவனின் டிரைகலர் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். 2026 கோடையில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com