
கூலி படத்தை இயக்கிய பிறகு லோகேஷ் கனகராஜ் நடிப்பு பக்கம் ஒதுங்கி DC படத்தில் நடித்து வருகிறார். இப்போது அவர் அடுத்து இயக்கும் படம் தெலுங்கில் தான் இருக்கப் போகிறது என சொல்லப்படுகிறது. தற்போது லோகேஷ் இயக்கும் ஏழாவது படத்திற்கான pre-production துவங்கியுள்ளதை, அவரது உதவி இயக்குநர் ஒருவர் புகைப்படத்தை பதிவிட்டு `L7' எனக் குறிப்பிட்டுள்ளார்.
சூர்யா நடித்து 2004ல் வெளியான `அஞ்சான்' படம் நவம்பர் 28 வெளியாகவுள்ள நிலையில், செய்தியார்களை சந்தித்தார் இயக்குநர் லிங்குசாமி. இந்த புதிய பதிப்பில் சூரி காமெடி இருக்காது, மேலும் திரைக்கதையையும் எடிட்டில் மாற்றி இருப்பதாகவும், படம் 2 மணிநேரம் மட்டுமே ஓடும் எனவும் தெரிவித்துள்ளார்.
அஜய் திஷன் நடிப்பில் தயாராகி படம் `பூக்கி'. இதில் ஒரு முக்கியமான வேடத்தில் விஜய் ஆண்டனி நடித்து படத்தை தயாரித்துள்ளார். தற்போது இந்தப் படத்திலிருந்து மனசு வலிக்கிது என்ற பாடல் வெளியாகியுள்ளது. படம் 26ல் வெளியாகவுள்ளது.
அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கத்தில், கோமதி ஷங்கர் நடித்திருக்கும் படம் 'ஸ்டீபன்'. நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் டிசம்பர் 5 வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது.
தமிழரசன் பச்சமுத்து இயக்கி தினேஷ், ஹரீஷ் கல்யாண் நடித்து பெரிய ஹிட்டான படம் `லப்பர் பந்து'. இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது எனவும், இதில் டாக்டர் ராஜசேகர், ரம்யா கிருஷ்ணன், ஷிவானி ராஜசேகர் ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
நந்தமுரி பாலகிருஷ்ணா, நயன்தாரா நடிப்பில் கோபிசந்த் மலினேனி இயக்கும் 'NBK 111' படம் பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது. இது ஒரு ஹிஸ்டாரிகல் ஜானர் படம் என சொல்லப்படுகிறது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் ராகுல் சாங்க்ரித்யன் இயக்கும் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகரும் `மம்மி' பட வில்லனுமான Arnold Vosloo நடிப்பதாக தகவல்.
மம்மூட்டி நடித்துள்ள `களம்காவல்' படம் டிசம்பர் 5 வெளியாகும் என அறிவிப்பு. முன்பு நவம்பர் 27 வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று புது வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர்.
ஜேம்ஸ் கன் இயக்கத்தில் உருவாகி ஜூலை மாதம் வெளியான படம் `Superman'. இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆன நிலையில், ஓடிடி வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 11ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் படம் வெளியாகிறது.
ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமாக வளர்ந்து வரும் நடிகர் க்ளென் பவல். இவர் நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த படமான `How to Make a Killing' டிரெய்லர் வெளியாகியுள்ளது. படம் அடுத்தாண்டு பிப்ரவரியில் வெளியாகவுள்ளது.