Lokesh Kanagarajs debut film DC Glimpse out now
Lokesh Kanagaraj, Wamiqa GabbiDC

ரத்தம் தெறிக்க ஒரு காதல் கதை.. வெளியானது DC க்ளிம்ப்ஸ்! | Lokesh Kanagaraj | Wamiqa Gabb | Anirudh

`மாலை நேரத்து மயக்கம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வாமிகா, கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பி இருக்கிறார்.
Published on

லோகேஷ் கனகராஜ்... 'மாநகரம்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், `கைதி', `மாஸ்டர்', `விக்ரம்', `லியோ', `கூலி' என அடுத்தடுத்த படங்கள் மூலம் முன்னணி இயக்குநராக வளர்ந்தார். இப்போது இவர் ஹீரோவாக அறிமுகமாகும் 'DC' படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.

`ராக்கி', `சாணிக்காயிதம்', `கேப்டன் மில்லர்' படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்க, வாமிகா கபி, சஞ்சனா முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். தமிழ் படமான `மாலை நேரத்து மயக்கம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வாமிகா, கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பி இருக்கிறார். இப்படத்தில் லோகேஷ் பெயர் தேவதாஸ், வாமிகா பெயர் சந்திரா. இருவர் பெயரின் முதல் எழுத்துதான் படத்தின் பெயராக வைக்கப்பட்டுள்ளது.

இன்று காதலர் தின ஸ்பெஷலாக இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கம்போல அருண் மாதேஸ்வரன் ஸ்டைலில் ரத்தம் தெறிக்கும் ஒரு படமாக உருவாகியுள்ளது என்பது படத்தின் முதல் அறிவிப்பு வீடியோவிலேயே தெரிந்தது. இப்போது வெளியாகியுள்ள க்ளிம்ப்ஸ் மூலம் இது ரத்தம் தெறிக்கும் ஒரு காதல் கதை என்பதை காட்டி இருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு இசை அனிருத். 2026 சம்மருக்கு படம் ரிலீஸ் ஆக உள்ளது.

Lokesh Kanagarajs debut film DC Glimpse out now
நடிகையாக அறிமுகமாகும் குஷ்பூ - சுந்தர் சி மகள்! | Avantika Sundar | Khushbu

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com