Lokesh, Wamiga
Lokesh, WamigaDC

லோகேஷ் ஹீரோ, அனிருத் இசை... வெளியான அறிவிப்பு! | Lokesh Kanagaraj | Wamiqa Gabbi | Anirudh

தமிழ் படமான `மாலை நேரத்து மயக்கம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வாமிகா, கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பி இருக்கிறார்.
Published on
Summary

லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகும் புதிய படத்தில், வாமிகா கபி ஹீரோயினாக நடிக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'DC' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், 2026 சம்மரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ்... மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், `கைதி', `மாஸ்டர்', `விக்ரம்', `லியோ', `கூலி' என அடுத்தடுத்த படங்கள் மூலம் முன்னணி இயக்குநராக வளர்ந்தார். ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோ இப்போது வெளியாகி இருக்கிறது.

`ராக்கி', `சாணிக்காயிதம்', `கேப்டன் மில்லர்' படங்களை இயக்கியவர் அருண் மாதேஸ்வரன். இவரது இயக்கத்தில் தான் லோகேஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். வாமிகா கபி ஹீரோயினாக நடிக்கிறார். மலையாளத்தில் `கோதா', இந்தியில் உருவான `ஜூப்ளி' சீரிஸ் போன்றவை மூலம் பாராட்டுகளை பெற்றவர் வாமிகா. தமிழ் படமான `மாலை நேரத்து மயக்கம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வாமிகா, கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பி இருக்கிறார். இப்படத்திற்கு `DC' எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதாவது படத்தில் லோகேஷ் பெயர் தேவதாஸ், வாமிகா பெயர் சந்திரா இருவர் பெயரின் முதல் எழுத்துதான் படத்தின் பெயர்.

அருண் மாதேஸ்வரன் இயக்கும் படங்களில் எப்போதும் வன்முறை அதீதமாக இருக்கும். அதே போல் இதில் லோகேஷ் ரத்தம் தோய்ந்த முகத்துடன் நடந்து வருகிறார். எதிரில் வாமிகா நடந்து வருவது போல இந்த வீடியோ அமைந்துள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், சன்பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கிறது. அக்டோபர் 25ம் தேதி துவங்கியது இப்படத்தின் ஷுட்டிங். இப்படம் 2026 சம்மர் வெளியீடாக ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com