‘புராஜெக்ட் கே’ படத்தில் கமல்ஹாசன்.. மலையாளத்தில் அறிமுகமாகும் அனிருத்; கோலிவுட் டாப் 10 செய்திகள்

‘புராஜெக்ட் கே’ படத்தில் நடிகர் கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.
Simbu-kamal
Simbu-kamalFile image

கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக்!

1. நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியிடவுள்ளதாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

இந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

மாமன்னன் யு/ஏ சான்றிதழ்!

2. மாரி செல்வராஜின் இயக்கத்தில், வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படம் வருகிற வியாழக்கிழமை (ஜூன் 29ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்திற்கு யு/ஏ சான்றிதழ், தணிக்கை குழுவால் அளிக்கப்பட்டுள்ளது.

வெல்கம் கமல்!

3. நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன்-பிரபாஸ்-தீபிகா படுகோனே நடிப்பில் தயாராகி வரும் ‘புராஜெக்ட் கே’ படத்தில் நடிகர் கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.

அமிதாப்-கமல்
அமிதாப்-கமல்@PTPrime Twitter

இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது என்று கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிப்பது குறித்து, நடிகர் அமிதாப் பச்சன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

லால் சலாம் படத்தில் நிரோஷா

4. நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா இயக்கி வரும் ‘லால் சலாம்’ படத்தில், 80 முதல் 90 வரையிலான காலக்கட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நிரோஷா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், ஜீவிதா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

5. தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், அடுத்ததாக மலையாள படம் ஒன்றின் மூலம் அங்கு இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குநருமான பிரித்விராஜ், நடித்து இயக்கவுள்ள ‘டைசன்’ படத்தின் வாயிலாக அனிருத் மலையாள திரையுலகில் அறிமுகமாகவுள்ளதாக தெரிகிறது.

6. விஜய்யின் ‘லியோ’ படத்தை முடித்த கையோடு, அடுத்து நடிகர் ரஜினிகாந்த் அல்லது ‘கைதி’ படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், ‘லியோ’ படம் முடிந்ததும், மிகப்பெரிய பட்ஜெட்டில், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் பிரபாஸ் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இருவரின் கேரியரிலும் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

7. பிரபல நகைச்சுவை நடிகரான தம்பி ராமையாவின் மகனும், ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’, ‘திருமணம்’ ஆகியப் படங்களின் நடிகருமான உமாபதி ராமையாவை, நடிகர் அர்ஜூனின் மூத்த மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜூன் வரும் தை மாதம் கரம்பிடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

8. மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள ‘கமல்234’ படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதேநேரத்தில், நடிகர் சிம்புவின் 49-வது படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

லியோ உரிமையை கைப்பற்றிய கோகுலம் மூவிஸ்

9. தமிழகத்தில் உள்ளது போன்று, கேரளாவிலும் நடிகர் விஜய்க்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்நிலையில், விஜய்யின் ‘லியோ’ படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை கோகுலம் மூவிஸ் பெற்றுள்ளது. இந்த முறை வழக்கத்தைவிடவும், கூடுதலான திரையரங்குகளில் ‘லியோ’ படத்தை வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஜப்பான் படத்தை முடித்த கார்த்தி

10. இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜப்பான்’ படத்தின் படப்பிடிப்புகளை நடிகர் கார்த்தி முடித்துக் கொடுத்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள இந்தப் படத்தில் அனு இம்மானுவேல், விஜய் மில்டன், சுனில் ஆகியோர் நடித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com