நாயகுடு vs மகாவீருடு
நாயகுடு vs மகாவீருடுட்விட்டர்

ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் ‘நாயகுடு’, ‘மகாவீருடு’ to விருதுகளை அள்ளிய ‘கண்ணே கலைமானே’ #Top10Cinemanews

‘மாவீரன்’ படத்திற்கு 30 கோடியிலிருந்து குறைத்து 25 கோடி ரூபாய் மட்டுமே சிவகார்த்திகேயன் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1. 1. ‘நாயகுடு’ vs ‘மகாவீருடு’

நாயகுடு
நாயகுடுட்விட்டர்

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற ‘மாமன்னன்’ படம், தெலுங்கில் ‘நாயகுடு’ என்றப் பெயரில் வரும் ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதேநேரத்தில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், யோகி பாபு, அதிதி ஷங்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ திரைப்படம் தமிழ்நாட்டில் ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தெலுங்கில் ‘மகாவீருடு’ என்றப் பெயரில் அதே நாளில் வெளியாகவுள்ளது. இதனால், இந்தப் படங்களில் எந்தப் படம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2. 2. மிஷன் சாப்டர் ஒன்றின் மேக்கிங் வீடியோ

அருண் விஜய் நடிக்கும் மிஷன் சாப்டர் ஒன்றின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. ஏ.எல் விஜய் இயக்கி வரும் அச்சம் என்பது இல்லையே படத்திற்கு தற்போது ‘மிஷன் சாப்டர் 1’ என்று டைட்டில் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் சிறைக் கைதியாக அருண் விஜயும் சிறைத்துறை அதிகாரியாக எமி ஜாக்சனும் நடித்துள்ளனர்.

3. 3. லப்பர் பந்து டப்பிங் பணிகள்

லப்பர் பந்து படக்குழு
லப்பர் பந்து படக்குழுட்விட்டர்

‘லப்பர் பந்து’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளன. ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இணைந்து நடிக்கும் இந்தத் திரைப்படத்தை, உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்துக்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார். ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

4. 4. ஜவான் முன்னோட்ட காட்சி வீடியோ நாளை வெளியீடு

அட்லீ இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்துவரும் ‘ஜவான்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் நாளை காலை 10.30 மணிக்கு வெளியாகின்றன. இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ‘ஜவான்’ திரைப்படம் வரும் செப்டம்பர் ஏழாம் தேதி வெளியாகிறது.

5. 5. 'லைப் ஈஸ் பியூட்டிபுல்’ ரீமேக்கில் வடிவேலு

வடிவேலு-மாரி செல்வராஜ்
வடிவேலு-மாரி செல்வராஜ்ட்விட்டர்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு மீண்டும் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘மாமன்னன்’ படம் பெருவெற்றி அடைந்தநிலையில், அடுத்தபடியாக ‘லைப் ஈஸ் பியூட்டிபுல்’ என்ற இத்தாலியன் படத்தை வடிவேலுவை நாயகனாக வைத்து மாரி செல்வராஜ் ரீமேக் செய்கிறார். இது குறித்து வடிவேலு ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதில் ‘மாமன்னன்’ படத்தைப் போலவே அந்தப் படம் என்னை மீண்டும் வித்தியாசமான கோணத்தில் வெளிபடுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.

6. 6. தனுஷை இயக்கும் நெல்சன்?

தனுஷ்-நெல்சன்
தனுஷ்-நெல்சன்கோப்புப் படம்

நடிகர் விஜய், ரஜினிகாந்தை தொடர்ந்து நடிகர் தனுஷை இயக்குநர் நெல்சன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஜெயிலர்’ படம் வெளியாக இன்னும் ஒரு மாதங்களே உள்ள நிலையில், இப்படத்தை அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கவுள்ளதாகவும், இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படும் என்றும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தெரிகிறது.

7. 7. ‘எல்.ஜி.எம்.’ ட்ரெய்லர் & ஆடியோ வெளியீடு

தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியின் தோனி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் முதல் படமான ‘லெட்ஸ் கெட் மேரீடு’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நாளை நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு தோனி மற்றும் அவரது மனைவி தற்போது சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளனர். மேலும் இப்படத்தின் தமிழ்நாட்டு திரையரங்கு விநியோக உரிமையை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி கைப்பற்றியுள்ளது.

8. 8. “அநீதி பார்க்கவேண்டிய படம்“

அநீதி போஸ்டர்
அநீதி போஸ்டர்ட்விட்டர்

வசந்தபாலன் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், துஷாரா விஜயன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘அநீதி’ திரைப்படம் வரும் 21 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் ஷங்கர், “ஒவ்வொரு தொழிலாளியும், முதலாளியும் பார்க்கவேண்டிய படம்; நமக்கு கீழ் வேலை செய்யும் மனிதர்களை எப்படி நடத்த வேண்டுமென கற்றுக்கொடுக்கும் சிறந்தப் படமாக அநீதி இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

9. 9. சம்பளத்தை குறைத்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்ட்விட்டர்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘பிரின்ஸ்’ படம் நல்ல வரவேற்பை பெறாததையடுத்து, தனது அடுத்தப் படமான ‘மாவீரன்’ படத்திற்கு 30 கோடியிலிருந்து 25 கோடி ரூபாய் மட்டுமே குறைத்து அவர் சம்பளம் பெற்றுள்ளதாகவும், மேலும், ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அடிக்கடி ஒரு குரல் கேட்பது போன்று வரும் காட்சிகளில், அந்தக் குரல் கொடுத்தது விஜய் சேதுபதிதான் என்று தகவல் வெளியாகியுள்ளது.

10. 10. கண்ணே கலைமானே படத்திற்கு 3 விருதுகள்

கண்ணே கலைமானே
கண்ணே கலைமானேட்விட்டர்

சீனு ராமசாமி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நாயகனாக நடித்து, கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'கண்ணே கலைமானே' திரைப்படத்திற்கு மூன்று விருதுகள் கிடைத்துள்ளது. இப்படத்திற்காக, இந்தோ-பிரெஞ்சு சர்வதேச பன்னாட்டு விழாவில் சிறந்த தயாரிப்பாளருக்கான விருதை உதயநிதி ஸ்டாலினும், சிறந்த நடிகைக்கான விருதை தமன்னாவும், சிறந்த துணை நடிகைக்கான விருதை வடிவுக்கரசியும் வென்றுள்ளனர்.

நாயகுடு vs மகாவீருடு
9 நாட்களில் 50 கோடியை தாண்டிய ‘மாமன்னன்’- படப்பிடிப்பு தளத்தில் நடந்தது குறித்து உதயநிதி பேசியதென்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com