Ken Karunas
Ken KarunasVetrimaaran, Karthi

கார்த்தி கிளாப் அடிக்க, வெற்றிமாறன் ஆக்ஷன் சொல்ல... துவங்கியது கென் படம்! | Ken Karunas

பள்ளிக்கூட பின்னணியில் கலகலப்பான படைப்பாக இப்படம் தயாராகிறது. ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
Published on

நடிகர் கருணாஸ் மற்றும் பாடகி கிரேஸ் ஆகியோரின் மகன் கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகிறார். `அழகுக்குட்டிச் செல்லம்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமான கென், `அசுரன்', `வாத்தி', `விடுதலை: பாகம் 2' போன்ற படங்களில் நடித்தார். மேலும் தனுஷின் சில படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். இந்த நிலையில், கென் நாயகனாகவும், இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் துவக்கவிழா மற்றும் பூஜை நேற்று (அக் 23) நடைபெற்றது.

தற்காலிகமாக 'புரொடக்‌ஷன் நம்பர் 1' எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தில் கென்னுடன் அனிஸ்மா அணில் குமார், மீனாட்சி தினேஷ் , பிரியான்ஷி யாதவ், சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பள்ளிக்கூட பின்னணியில் கலகலப்பான படைப்பாக இப்படம் தயாராகிறது.

இப்படத்தின் துவக்க நிகழ்வில் நடிகர் கார்த்தி, விஷால், இயக்குநர் வெற்றிமாறன், ஆர். ஜே. பாலாஜி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, டாக்டர் ஐசரி கே. கணேஷ், அருண் உள்ளிட்ட கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினர். முதல் காட்சிக்கு கார்த்தி க்ளாப் அடிக்க, வெற்றிமாறன் ஆக்ஷன் சொல்லி படப்பிடிப்பை துவங்கி வைத்தனர்.

இப்படத்தின் பூஜை புகைப்படங்களைப் பகிர்ந்து " கடவுளுக்கு நன்றி. இரண்டரை ஆண்டுகால கனவு, இறுதியாக அது நிஜமாகிவிட்டது. என்னை நம்பி, எப்போதும் எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி" என்று கென் கருணாஸ் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com