பாலிவுட்டில் கால்பதிக்கவுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ்.. அடுத்த மாதம் தொடங்கும் படபிடிப்பு

நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்ட்விட்டர்

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நடிப்பின் மூலம் தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் மகாநதி, மிஸ் இந்தியா, ரங் தே, வாஷி மற்றும் தசரா போன்ற படங்களின் மூலம் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவர் தற்போது பாலிவுட்டில் வருண் தவானுக்கு ஜோடியாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் அடுத்த மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கீர்த்தி சுரேஷ்-வருண் தவான்
கீர்த்தி சுரேஷ்-வருண் தவான்

கலீஸ் இயக்கியத்தில் அட்லீயின் தயாரிப்பில் உருவாகவுள்ள #VD18 திரைப்படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் வருண் தவான் ஒரு காவல்துறை அதிகாரியாகவும், கீர்த்தி சுரேஷ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது தெறி பட ரீமேக்காக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் மும்பையில் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மே 31, 2024 அன்று திரையரங்குகளில் படத்தை வெளியிடும் குறிக்கோளுடன் நவம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க தயாரிப்பு குழு திட்டமிட்டுள்ளது.

தற்காலிகமாக #VD18 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சினி1 ஸ்டுடியோவில் இருந்து முராத் கெடானி மற்றும் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோவில் இருந்து பிரியா அட்லீ ஆகியோர் தயாரிக்கின்றனர்.

இந்த படம் ஆக்‌ஷன் நிறைந்த ஒரு கமர்ஷியல் கதையாகும். சமீபத்தில் அமர் கௌசிக்கின் பேடியா படத்தில் ஓநாய் வேடத்தில் நடித்த வருண், இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், கீர்த்தி தென்னிந்திய திரையுலகில் தொடர்ச்சியான படங்களுடன் பிஸியான ஷெட்யூலில் இருக்கிறார். வரவிருக்கும் அவரது படங்களில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போலா ஷங்கர் திரைப்படத்தில் சிரஞ்சீவியுடன் அவர் நடிக்கிறார். கூடுதலாக கீர்த்தி சுரேஷ், ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா மற்றும் கண்ணிவெடி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

- சங்கரேஸ்வரி.S

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com