\
Keerthiswaran about Dude 2 and Simbu film
KeerthiswaranDude 2

"அடுத்து ட்யூட் 2வா? சிம்பு படமா?" - கீர்த்தீஸ்வரன் சொன்ன பதில் | Dude | Keerthiswaran

சமீபத்தில் நானும் பிரதீப் ப்ரோவும் பேசிக்கொண்டிருந்த போது ஒரு யோசனை சொன்னேன். அது அவருக்கு பிடித்திருந்தது.
Published on

பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கிய படம் `ட்யூட்'. கடந்த ஆண்டு வெளியான இந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டானது. சமீபத்தில் நடந்த விருதுவிழா ஒன்றில் கலந்து கொண்ட கீர்த்தீஸ்வரனிடம் `ட்யூட் 2' படம் உருவாகுமா எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்னவர் "ட்யூட் படம் மிகப்பெரிய பயணம். படம் வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் என்னுடைய மொத்த வாழ்க்கையே அந்தப் படத்தை எடுப்பதற்காக தான் என்பது போல இருக்கிறது. 

சமீபத்தில் நானும் பிரதீப்  ப்ரோவும் பேசிக்கொண்டிருந்த போது ஒரு யோசனை சொன்னேன். அது அவருக்கு பிடித்திருந்தது. அதில் ட்யூட் படத்தின் ஸ்பிரிட் இருக்கிறது. அதை சரியாக முழுமையாக்க முடிந்தால், அதனை ட்யூட் 2 என எடுக்கலாம். ஏனென்றால் அதில் ட்யூட் பட தொடர்ச்சி இருக்கிறது" என்றார்.

Dude
Dude

அடுத்தாக சிம்பு படத்தை இயக்குவதாக தகவல் வருகிறதே எனக் கேட்கப்பட "நான் ஒரு கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். அது மாஸ் + எமோஷனல் என எல்லாம் கலந்த கதையாக இருக்கிறது. அதுக்கு ஒரு ஸ்டார் தேவை, நான் அவரோடு தான் வேலை செய்ய வேண்டும் என எழுதி வருகிறேன்.  சீக்கிரம் இது சார்ந்த அறிவிப்பு வரும்" என்றார்.

Keerthiswaran about Dude 2 and Simbu film
"நீங்கள் இல்லாமல் நடந்திருக்காது சூர்யா சார்!" - ஆர் ஜே பாலாஜி நெகிழ்ச்சி | R J Balaji | Karuppu
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com