கதிர் நடித்துள்ள `லிங்கம்' ட்ரெய்லர் வெளியீடு! | Kathir | Lingam | Divya Bharathi
கதிர், திவ்யா பாரதி, சத்யா மற்றும் பூர்ணிமா ரவி நடித்துள்ள தமிழ் கிரைம் திரில்லர் படம், `லிங்கம்'. பிரபல எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார் எழுதி இயக்கியுள்ள இந்தத் தொடரை பிரசாந்த் பாண்டியராஜ் ஷோ ரன்னராக வழி நடத்தியுள்ளார். இந்த தொடரின் ட்ரெய்லர் தற்போது வெளியிட்டுள்ளது.
1990களிலும் 2000களின் தொடக்கக் காலத்திலும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நடைபெற்ற நம்ப முடியாத உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட லிங்கம், ஒரு கபடி வீரரின் வாழ்க்கையில் நிகழும் மாற்றத்தைச் சொல்லும் விறுவிறுப்பான குற்றம் மற்றும் பழிவாங்கல் கதையாக இது உருவாகியுள்ளது. ஒரு சம்பவம் ஒரு மனிதனின் வாழ்க்கைப் பாதையை என்றென்றும் மாற்றிவிட முடியும் என்பதை ஆராயும் வலுவான தமிழ் ஒரிஜினல் தொடராக தயாராகி இருக்கிறது ’லிங்கம்’. இது, தொடர்ச்சியாக வெப் சீரிஸ்கள் மூலம் கவனம் ஈர்க்கும் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஜூன் 26ஆம் தேதி வெளியாகிறது.

