“நீங்க ஏதோ பெரிய தப்பு பண்ணியிருக்கீங்க..” - வெளியானது ‘கருமேகங்கள் கலைகின்றன’ ட்ரெய்லர்!

இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது.
கருமேகங்கள் கலைகின்றன ட்ரெய்லர்
கருமேகங்கள் கலைகின்றன ட்ரெய்லர்ட்விட்டர்

இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் நீண்டநாட்களுக்குப் பிறகு உருவாகியுள்ள படம், ‘கருமேகங்கள் கலைகின்றன’. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, கவுதம் வாசுதேவ் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அதிதி பாலன், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியிருக்கிறார்.

இப்படம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரெய்லரை, முன்னாள் நீதியரசர் சந்துரு இன்று அவரது இல்லத்தில் வெளியிட்டார்.

karumegangal kalaikindrana movie
karumegangal kalaikindrana movie

வழக்கம்போல் தங்கர் பச்சான் இப்படத்திலும் அனைத்து குடும்ப உறவுகளையும் அழகியலாய்க் காட்சிப் படுத்தியுள்ளார். நேர்மையான தந்தை - ஊழலுக்கு துணை போகும் மகன் ஆகிய இருவருக்குமிடையே ஏற்படும் நிகழ்வுகள்தான் கதைக்களமாக தெரிகிறது. காட்சிகளும் உரையாடல்களும் அழுத்தத்தைத் தருவது போல அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, “ஒரே வீட்ல அப்பனும் பிள்ளையும் 10 வருஷமா பேசாம இருந்திருக்கோம்” என்ற வசனமும் ”நீங்க ஏதோ பெரிய தப்பு பண்ணியிருக்கீங்க தாத்தா” என்கிற வசனமும் மனதைக் கலங்கச் செய்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com