\
Kamalhaasan about his 66 years cinema journey
KamalhaasanKamalism

"சினிமாத் துறையின் 'Gen Z'யில் மூத்தவனாக இருப்பேன்!" - கமல்ஹாசன் | 67 Years of Kamalism

அந்த 67 ஆண்டுகளில், உண்மையான கற்றலாக நான் கருதுவது சுமார் 20 ஆண்டுகளை மட்டுமே.
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். 1960ஆம் ஆண்டு வெளியான `களத்தூர் கண்ணம்மா' திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானர் கமல்ஹாசன். அதன்படி, நேற்றோடு திரைத்துறையில் ஒரு நடிகராக 66 ஆண்டுகளை நிறைவுசெய்து 67ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதற்கு பலரும் நேற்று வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்நிலையில் அதற்கு நன்றி சொல்லி இன்று ஒரு பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன். அந்தப் பதிவில், "திரைத்துறையில் எனது 67 ஆண்டுகாலப் பயணத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. அந்த 67 ஆண்டுகளில், உண்மையான கற்றலாக நான் கருதுவது சுமார் 20 ஆண்டுகளை மட்டுமே. மீதமுள்ள காலம், கழிவுநீர் ஓட்டத்தோடு அடித்துச் செல்லப்பட்டதைப் போன்றது. இருப்பினும், ஒரு நம்பிக்கை தரும் விஷயம் என்னவென்றால், அந்த நீரோட்டம் எவ்வளவு இருண்டதாக இருந்தாலும், 'கூட்டுச் சினிமா' (collective cinema) எனும் அந்தப் பேராற்றலில் - அதாவது எல்லையற்ற கடலில் - கலப்பதற்கான காத்திருப்புதான் அது. கலைஞர்கள், ரசிகர்கள் என நாம் அனைவரும் அதை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

Kamalhaasan about his 66 years cinema journey
"அவர் மீது கோபம் தான்.." - வெற்றிமாறன் சொன்ன சம்பவம் | Vetrimaaran | Pyaar Prema Kalyanam

எனவே, இத்துறையில் எனது ஆண்டுகளை மக்கள் கணக்கிடுவதை நிறுத்திவிட்டு, வேறு இடங்களில் சிறந்த எண்களைத் தேடத் தொடங்கும் முன்பாகவே, அனுபவமாக நான் சேகரித்தவற்றை இன்னும் மேம்படுத்திக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.1895 டிசம்பரில் லுமியர் சகோதரர்களின் முதல் பொதுத் திரைப்படக் காட்சிக்குப் பிறகு, திரைப்படத் துறை சுமார் 130 ஆண்டுகள் 8 மாதங்களாக இயங்கி வருகிறது.

kamal haasan
kamal haasanPT

அத்துறையின் ஒட்டுமொத்த வரலாற்றில் பாதிக்கும் மேலான காலமான 67 ஆண்டுகளை நான் கடந்துவிட்டேன் என்பதை என் குழுவினர் எனக்கு நினைவூட்டினர்! இது ஒரு வியக்கத்தக்க உண்மை. ஆயினும், எனது சொந்தக் கணக்கீட்டின்படி, உண்மையான கற்றலாக நான் கருதுவது சுமார் 20 ஆண்டுகளை மட்டுமே. ஒருவேளை, சினிமாத் துறையின் 'Gen Z' (இன்றைய தலைமுறை) பிரிவில் நான்தான் மிக மூத்தவனாக இருப்பேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com