கமல்-பிரபாஸ்
கமல்-பிரபாஸ்File Photo

ரூ500 கோடி செலவில் உருவாகும் பிரம்மாண்ட படத்தில் பிரபாஸுக்கு வில்லனாகும் கமல்? - சம்பளம் 120 கோடியா?

நடிகர் கமல்ஹாசன் தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.
Published on

கீர்த்தி சுரேஷின் ‘மகாநதி’ படத்தை இயக்கிய நாக் அஸ்வின் தற்போது ‘புராஜெக்ட் கே’ என்றப் படத்தை இயக்கி வருகிறார். பெரும் பொருட் செலவில் உருவாகி வரும் இந்தப் படத்தில் பிரபாஸ், திஷா பதானி, தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாவதால், இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. வரும் ஆகஸ்ட் முதல் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள நடிகர் கமல்ஹாசன் தேதிகள் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 120 கோடி ரூபாய் இந்தப் படத்திற்காக கமல்ஹாசன் சம்பளம் பெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் கமல்ஹாசன் தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். ‘புராஜெக்ட் கே’ அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com