கமல்ஹாசனின் ‘வேட்டையாடு விளையாடு’ படம் ரீ ரிலீஸ் - எப்போது தெரியுமா?

‘வேட்டையாடு விளையாடு’ 2-ம் பாகத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் கடந்த வருடம் தெரிவித்திருந்தார்.
Vettaiyaadu Vilaiyaadu
Vettaiyaadu VilaiyaaduFile Photo

கடந்த 2006-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி வெளியான திரைப்படம் ‘வேட்டையாடு விளையாடு’. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ், ஜோதிகா, கமாலினி முகர்ஜி, டேனியல் பாலாஜி ஆகியோர் நடிப்பில் உருவான இந்தப் படம், திரையரங்கில் வெளியான சமயத்தில் மாபெரும் வெற்றிபெற்றது. க்ரைம்-த்ரில்லர்க தயாராகியிருந்த இந்தப் படத்திற்கு ஹாரிஜ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். செவன்த் சேனல் கம்யூனிகேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது.

Vettaiyaadu Vilaiyaadu Poster
Vettaiyaadu Vilaiyaadu Poster

இந்தப் படத்தின் பாடல்களும், வசனங்களும் மிகப்பெரிய ஹிட் அடைந்தன. இந்நிலையில், ‘வேட்டையாடு விளையாடு’ படம், சில தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிற 23-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக படக்குழுவினர், புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளனர். ஏற்கனவே, ரஜினியின் ‘பாபா’ திரைப்படம் இதுபோன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தினை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ‘வேட்டையாடு விளையாடு’ 2-ம் பாகத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் கடந்த வருடம் தெரிவித்திருந்தார். ஆனால், இப்படத்தில் கமல் நடிப்பாரா என்பது உறுதியாக தெரியவில்லை என்றும், 120 பக்கங்களுக்கு மேல் திரைக்கதை எழுதப்பட்டு தம்மிடம் தயாராக இருப்பதாகவும், விரைவில் படம் பற்றிய விரிவான விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் கவுதம் வாசுதேவ் மேனன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com