மிரட்டல் இசையில் கையில் தீப்பந்தம்... கமல் & எச் வினோத் கூட்டணியில் புதியப் படம் - வெளியான அறிவிப்பு

தெலுங்கு திரையலகின் முன்னணி நடிகரான பிரபாஸ்-அமிதாப் பச்சன் நடிக்கும் ‘புரொஜெக்ட் கே’ படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் தற்போது நடித்து வருகிறார்.
Kamal 233 Movie
Kamal 233 MovieTwitter

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்துவந்தார் நடிகர் கமல்ஹாசன். இந்தப் படம் பொங்கல் அல்லது தமிழ் புத்தாண்டையொட்டி வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, தெலுங்கு திரையலகின் முன்னணி நடிகரான பிரபாஸ்-அமிதாப் பச்சன் நடிக்கும் ‘புரொஜெக்ட் கே’ படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் தற்போது நடித்து வருகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது.

kamal haasan and H vinoth in farmers meet
kamal haasan and H vinoth in farmers meet

இதற்கிடையில், கமல்ஹாசனின் 234 ஆவது படத்திற்காக இயக்குநர் மணிரத்தினத்துடன் அடுத்த வருடம் இணையவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு முன்னதாக இயக்குநர் எச் வினோத்துடன் அவர் இணையவிருப்பதாக தகவல் பரவின. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்து வந்த நிலையில், கடந்த மாதம் கமல்ஹாசன் மற்றும் எச் வினோத் ஆகிய இருவரும், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் அலுவலகத்தில், 'தேசிய நெல் திருவிழா - 2023' நிகழ்வை முன்னிட்டு விவசாயிகளை சந்தித்த புகைப்படங்கள் வெளியாகின.

இதையடுத்து கமல்ஹாசனின் 233 ஆவது படத்தை எச் வினோத் இயக்கவிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், விவசாயம் சார்ந்த கதைக்களமாக இருக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பட அறிவிப்பு சம்பந்தமான சிறிய வீடியோவில் சிவப்பு வண்ணம் அடங்கிய பின்னணியில், கமல்ஹாசன் கையில் தீப்பந்தம் வைத்துக்கொண்டுள்ளார். மேலும், தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள ‘KH233’ என்ற படத்தின் தலைப்புக்கு கீழ் ‘rise to rule’ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், ஆர் மகேந்திரன் உடன் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்காக கமல்ஹாசன் கதை வடிவமைத்துள்ளார். இயக்குநர் எச் வினோத், எழுதி, இயக்கவுள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்சின் 52 ஆவது படமாக இது உருவாகிறது. ‘தலைவன் இருக்கிறான்’ கதையா இருக்குமோ என்று ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர். இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்து எதுவும் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com