\
JSK Sathishkumar met accident in a shoot
JSK SathishkumarShooting

சண்டைக்காட்சியின்போது காயமடைந்த நடிகர்! | JSK Sathishkumar

உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, மருத்துவர்களால் விரிவான பரிசோதனை செய்யப்பட்டது. அவர் குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு முழுமையான ஓய்வு எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Published on

JSK சதீஷ்குமார் நடிப்பில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. சாய் ஸ்ரீனிவாஸ் இயக்கும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தில் பவல் நவகீதன், சாந்தினி தமிழரசன், சான்ட்ரா ஆமி, பவித்ரா ஐயர் மற்றும் பிஜேஷ் நாகேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

JSK Sathishkumar
JSK Sathishkumar

இப்படத்திற்கான சண்டைக் காட்சி படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தபோது எதிர்பாராதவிதமாக JSK சதீஷ்குமார் காயமடைந்தார். உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, மருத்துவர்களால் விரிவான பரிசோதனை செய்யப்பட்டது. அவர் முழுமையாக குணமடைவதை உறுதி செய்வதற்காக, குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு முழுமையான ஓய்வு (Bed Rest) எடுக்குமாறு மருத்துவக் குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர். இவ்விபத்து துரதிர்ஷ்டவசமானது என்றாலும், அவரது உடல்நிலை தொடர்ந்து உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவர் நலமுடன் தேறி வருவதாகவும் படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JSK Sathishkumar met accident in a shoot
முதல்வர் விஜய்க்கு, நடிகர் விஷாலின் வித்தியாசமான பரிசு! | CM Vijay | Vishal
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com