\
Jr NTR Trivikram movie sparks a debate
NTRGod of War

தமிழ் கடவுள் பற்றிய படத்தில் சமஸ்கிருதம்.? இணையத்தில் வலுக்கும் எதிர்ப்பு! | Jr NTR | Trivikram

புராணக் கதைகளின் தாக்கத்துடன், தெய்வீக கருவை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், வலுவான கதைக்களம், ஆழமான உணர்வுகள், அதிரடி காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான உலகக் கட்டமைப்புடன் உருவாகவுள்ளது.
Published on

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் `டிராகன்' படத்தில் நடித்து வருகிறார். இதற்கு பின்னர் அவர் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் படத்தில் தான் நடிக்க உள்ளார் என்.டி.ஆர்.

Jr NTR Trivikram movie sparks a debate
”சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 45வது அறிமுக இயக்குநர் நான்!” - விஷால் நெகிழ்ச்சி | Vishal | Magudam

இவர்களின் முந்தைய வெற்றிப்படமான Aravinda Sametha Veera Raghava (அரவிந்த சமேத வீரராகவா)-க்கு பிறகு இந்த கூட்டணி எப்போது இணையும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இப்போது இவர்கள் கூட்டணியில் மீண்டும் படம் உருவாகுவது இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. புராணக் கதைகளின் தாக்கத்துடன், தெய்வீக கருவை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், வலுவான கதைக்களம், ஆழமான உணர்வுகள், அதிரடி காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான உலகக் கட்டமைப்புடன் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் இணைந்துள்ளார்.

போர் கடவுள் முருகர் சம்பந்தப்பட்ட படமாக இது இருக்கும் எனவும், படத்தின் பெயர் GOD OF WAR எனவும் சொல்லப்படுகிறது. ஆனால் படத்தின் அறிவிப்பு போஸ்டரில் சமஸ்கிருதம் இடம்பெற்றுள்ளதும், வடக்கில் பிறந்தார் என குறிப்பிட்டு தயாரிப்பாளர் பகிர்ந்த எக்ஸ் தள பதிவும் இணையத்தில் இப்போது பேசு பொருளாகி இருக்கிறது. தமிழ் கடவுள் பற்றிய படத்தின் போஸ்டரில் சமஸ்கிருதம் எதற்கு எனவும், முருகன் எப்போது வடக்கில் பிறந்தார் எனவும் கேள்விகளை பலரும் எழுப்பி வருகின்றனர்.

Jr NTR Trivikram movie sparks a debate
பவி டீச்சருக்கு கல்யாணம்! | Brigida | Pavi Teacher
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com