\
Jana Nayagan not for June 18, Mersal Re Release Confirmed
CM VijayX

ஜனநாயகன் ரிலீஸ் இல்லையா? ரீ-ரிலீஸ் ஆகும் மெர்சல்! | Jana Nayagan | Mersal

முதல்வர் விஜயின் பிறந்தநாள் ஜூன் 22ம் தேதி வர இருப்பதால், அதனையொட்டி `ஜனநாயகன்' வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அது நடக்க வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.
Published on

விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கியுள்ள படம் `ஜனநாயகன்'. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பிரகாஷ்ராஜ் எனப் பலரும் நடித்துள்ள இப்படம் பொங்கல் வெளியீடாக வர இருந்து சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு தற்போது வரை வெளியீடு பற்றிய தகவல் எதுவும் இல்லாமல் முடங்கி இருக்கிறது. நடிகர் விஜய் இப்போது முதலமைச்சர் விஜய் ஆகிவிட்டார். எனவே படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

முதல்வர் விஜயின் பிறந்தநாள் ஜூன் 22ம் தேதி வர இருப்பதால், அதனையொட்டி `ஜனநாயகன்' வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அது நடக்க வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. காரணம் இப்படத்தை தயாரித்துள்ள கே வி என் நிறுவனம், மலையாளத்தில் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள `பாலன்' படம் ஜூன் 19 வெளியாகவுள்ளது. ஒரே நாளில் கண்டிப்பாக இரு படங்களை கே வி என் நிறுவனம் வெளியிடாது. கூடவே `ஜனநாயகன்' படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கும், அப்பணத்தை திருப்பி அளிக்க உள்ளதாம் கே வி என்.

முதல்வரான பின் வரும் முதல் பிறந்தநாள் என்பதால் கொண்டாட்டத்துக்கு எந்தப் படமும் இல்லையா என பேச்சுக்கள் எழுந்தது. இப்போது அதற்கு பதிலாக அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த `மெர்சல்' படத்தை ஜூன் 19ம் தேதி ரீ ரிலீஸ் செய்ய உள்ளனர். City Chenglepet என்கிற  சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம் &  திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் 100  தியேட்டர்களில் வெளியாகிறது இப்படம்.

Jana Nayagan not for June 18, Mersal Re Release Confirmed
"நீங்கள் இல்லாமல் நடந்திருக்காது சூர்யா சார்!" - ஆர் ஜே பாலாஜி நெகிழ்ச்சி | R J Balaji | Karuppu
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com