Box Office-ஐ அலறவிட்ட ஜெயிலர்... தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல்! வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி ஒரு வாரம் நிறைவடைந்த நிலையிலும் வரவேற்பும் வசூலும் குறையவில்லை.
இந்நிலையில் ‘ஜெயிலர்’ படம் உலகம் முழுவதும் முதல் வாரத்தில் ரூ.375 கோடி வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே இதுதான் முதல் வாரத்தில் வசூலான அதிக வசூல் என்றும் அப்பதிவில் கூறப்பட்டுள்ளது. இந்த பதிவால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

