
நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். படையப்பா ரீ ரிலீஸ், சென்னை திரைப்பட விழாவில் `பாட்ஷா' என நாள் முழுக்க களைகட்ட, ஜெயிலர் 2வில் இருக்கும் இன்னொரு நடிகர் அட்டென்டன்ஸ் போட்டிருக்கிறார். மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து, அவருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியுள்ள `பராசக்தி' படத்திலிருந்து மூன்றாவது சிங்கிள் `நமக்கான காலம்' பாடலின் புரோமோ வெளியீடு. முழுப்பாடல் டிசம்பர் 14 வெளியாகவுள்ளது.
விக்ரம் பிரபு, LK அக்ஷய்குமார் நடிப்பில் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள `சிறை' பட ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. படம் டிசம்பர் 25 வெளியாகவுள்ளது.
சசிகுமார் நடிப்பில் ராஜுமுருகன் இயக்கியுள்ள 'MY LORD' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'ராசாதி ராசா' பாடல் வெளியானது.
கணேஷ் K பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடித்துள்ள `கராத்தே பாபு' படத்தின் டப்பிங் பணிகள் துவக்கம்.
பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முகபாண்டியன் நடித்துள்ள `கொம்பு சீவி' பட ட்ரெய்லர் வெளியீடு. படம் டிசம்பர் 18 வெளியாகவுள்ளது.
அருண் விஜய் நடிப்பில் க்ரிஷ் திருக்குமரன் இயக்கியுள்ள படம் `ரெட்ட தல'. இப்படத்திலிருந்து Dark Theme என்ற தீம் ட்ராக் இன்று வெளியாகியுள்ளது.
சாந்தனு மற்றும் அஞ்சலி நாயர் நடிக்கும் ’மெஜந்தா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு. இப்படத்தை பரத் மோகன் இயக்கியுள்ளார்.
கௌதம் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடித்து ஜனவரி மாதம் வெளியான மலையாளப் படம் `Dominic and The Ladies Purse' திரையரங்க வெளியீட்டுக்கு பின் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. அதன்படி டிசம்பர் 19ம் தேதி ஸீ5 ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.
Craig Gillespie இயக்கத்தில் Milly Alcock நடித்துள்ள `Supergirl' பட டீசர் வெளியாகியுள்ளது. படம் 2026 ஜூன் 26 வெளியாகவுள்ளது. ஏற்கெனவே இந்த Supergirl பாத்திரம் ஜேம்ஸ் கண் இயக்கிய சூப்பர்மேன் படத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.